இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், தல அஜித்குமாரின் 50-வது திரைப்படமாக கடந்த 2011-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் மங்காத்தா. 13 ஆண்டுகள் கடந்த பின்னரும், இந்தப் படத்தின் மீதான மவுசு குறையாமல் இன்று தமிழகம் முழுவதும் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
நெகட்டிவ் ஷேட் கலந்த ‘வினாயக் மகாதேவ்’ கதாபாத்திரத்தில் அஜித்தின் நடிப்பு ரசிகர்களை கட்டிப்போட்டது. அவரின் சால்ட் அண்ட் பெப்பர் லுக் ட்ரெண்ட் செட்டராக மாறியது.
ஆக்சன் கிங் அர்ஜுன் மற்றும் அஜித் இடையேயான மோதல் காட்சிகள் படத்திற்கு பெரும் பலமாக அமைந்தன.
யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை (BGM) இன்றும் பலரின் ரிங்டோனாக உள்ளது. குறிப்பாக மங்காத்தா தீம் மியூசிக் திரையரங்குகளை அதிரவைக்கும்.
“A Venkat Prabhu Game” என்ற அடைமொழியுடன் விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் அதிரடி திருப்பங்களால் இப்படம் ரசிகர்களை கவர்ந்தது.
தற்போது அஜித்தின் ‘AK64’ மற்றும் ‘AK65’ படங்களின் அப்டேட்டுகள் வந்து கொண்டிருக்கும் வேளையில், மங்காத்தா படத்தின் ரீ-ரிலீஸ் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்துள்ளதது. இன்று காலை முதலே திரையரங்குகளில் ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் மங்காத்தா வருகையை கொண்டாடி வருகின்றனர்.
மீண்டும் ஒருமுறை “It’s a Vinayak Mahadev Game” என திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் குவிந்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…
தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,
தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…
இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.
இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை, பாரம்பரியம் மற்றும் சாதனைகளை…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா (84), கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில்…