Download App

ஹரிஷ் கல்யாணின் 15வது படத்தின் டைட்டில் வெளியீடு!

கார்த்திகை 22, 2025 Published by anbuselvid8bbe9c60f

hk

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் நடிகர் ஹரிஷ் கல்யாணின் 15வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் இன்று வெளியாகியுள்ளது. ‘லிப்ட்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி கவனம் பெற்ற வினீத் வரபிரசாத் இயக்கும் இப்படத்திற்கு ‘தாஷமக்கான்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 5 மணிக்கு டைட்டில் ப்ரோமோ மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே ‘HK15’ என விளம்பரப்படுத்தப்பட்ட இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாகவும், பிரீத்தி முகுந்தன் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர்.

திங்க் ஸ்டுடியோஸ் & புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு பிரிட்டோ மைக்கேல் இசையமைக்கிறார். படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

‘லிப்ட்’ படத்திற்குப் பிறகு வினீத் வரபிரசாத்தின் அடுத்த படைப்பு என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ‘தாஷமக்கான்’ என்ற தலைப்பே ஏற்கனவே கியூரியாசிட்டியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று மாலை வெளியாகும் ப்ரோமோவை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

Trending Now

No trending articles in this category from the last 3 days.