Download App

சூப்பர் ஹிட் வெப்சீரிஸ் 2ஆம் பாகத்தில் சசிகுமார்.. ‘பீஸ்ட்’ நடிகையும் இணைவதாக தகவல்..!

ஆனி 7, 2025 Published by Natarajan Karuppiah

அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான சூப்பர் ஹிட் வெப் சீரிஸின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், இதில் சசிகுமார் மற்றும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்த  நடிகை நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது

கடந்த 2022 ஆம் ஆண்டு, ‘வதந்தி’ என்ற வெப் தொடர் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது என்பது பலர் அறிந்ததே. முதல் சீசனில் எஸ்.ஏ. சூர்யா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, லைலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கிரைம் த்ரில்லர் கதையம்சம் கொண்ட இந்த தொடரின் இரண்டாம் பாகம் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

சசிகுமார் முக்கிய கேரக்டரில் நடிக்க, இந்த தொடரின் படப்பிடிப்பு மதுரை, நெல்லை ஆகிய பகுதிகளில் நடந்து வருகிறது. இந்த நிலையில், ‘பீஸ்ட்’ ’டாடா’ உட்பட சில படங்களில் நடித்த நடிகை அபர்ணா தாஸ் தற்போது இதில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த தொடர் அடுத்த ஆண்டு அமேசான் ப்ரைமில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

Trending Now

No trending articles in this category from the last 3 days.