வெங்கட் பிரபு – சிவகார்த்திகேயன் படத்தில் விஜய் ஆண்டனி முக்கிய வேடம்? பேச்சுவார்த்தை முடிந்ததாக தகவல்!
மார்கழி 29, 2025 Published by anbuselvid8bbe9c60f

இயக்குநர் வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படத்தின் முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு 2026 பிப்ரவரி மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இசையமைப்பாளராக அனிருத் அல்லது யுவன் ஷங்கர் ராஜாவில் ஒருவர் இணையலாம் எனக் கூறப்படும் நிலையில் குழப்பம் நீடிக்கிறது.
இந்நிலையில், இப்படத்தில் விஜய் ஆண்டனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகவும், படப்பிடிப்பு தேதிகள் உறுதியானதும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் எனவும் கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனுக்கு வில்லன் வேடத்தில் விஜய் ஆண்டனி நடிக்கலாம் என சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும், இது குறித்து படக்குழு தரப்பில் இருந்து இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

முன்னதாக, இப்படத்துக்காக சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு அமெரிக்காவுக்கு சென்று விஷுவல் எஃபெக்ட்ஸ் (VFX) குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். சைன்ஸ் ஃபிக்ஷன் கதைக்களத்தில் உருவாகும் இப்படம் டைம் டிராவல், டி-ஏஜிங் தொழில்நுட்பம் போன்றவற்றை பயன்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் படப்பூஜையுடன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டணி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது!

















