Download App

ஓடவும் முடியாம, ஒளியவும் முடியாம தானா வெளியே வருவான்: விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’ டிரைலர்..!

வைகாசி 26, 2025 Published by Natarajan Karuppiah

விஜய் ஆண்டனி நடித்த ‘மார்கன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து, ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில், சற்றுமுன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி, இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

முழுக்க முழுக்க திரில் மற்றும் சஸ்பென்ஸ் கதையம்சம் கொண்ட இந்த படத்தை லியோ ஜான்பால் இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளதுடன், இசையமைத்தும் உள்ளார்.

இந்த படம், விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. ஜூன் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில், ஒரு சைக்கோ வரிசையாக கொலை செய்து, அதன் பிணத்தை கருப்பாக நிறம் மாற்றி, குப்பை தொட்டிகளில் போட்டு வரும் நிலையில், அந்த கொலைகாரனை பிடிக்கும் பொறுப்பை ஏற்கும் விஜய் ஆண்டனி வெற்றி பெற்றாரா என்பதுதான் இந்த படத்தின் கதை என தெரிகிறது.

மொத்தத்தில், விஜய் ஆண்டனிக்கு இந்த படம் இன்னொரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

Trending Now

No trending articles in this category from the last 3 days.