Download App

விஜய் தேவரகொண்டாவின் ‘ரணபலி’: ராஷ்மிகாவுடன் மீண்டும் ஒரு மாஸ் கூட்டணி

தை 27, 2026 Published by Natarajan Karuppiah

தெலுங்குத் திரையுலகின் ‘ரவுடி பாய்’ விஜய் தேவரகொண்டா மற்றும் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் காம்போவுக்கு எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் படங்களுக்குப் பிறகு நீண்ட இடைவேளை கழித்து இவர்கள் இருவரும் மீண்டும் இணைவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களது 14-வது படத்திற்கு (VD 14) ‘ரணபலி’ (Ranabaali) எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.

இயக்குநர் ராகுல் சாங்கிருத்யன் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படம், 19-ம் நூற்றாண்டில் (1854 – 1878) பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. வரலாற்றில் மறைக்கப்பட்ட அல்லது திரிக்கப்பட்ட ஒரு வீரனின் கதையை இந்தப் படம் பேசவுள்ளது.

‘சபிக்கப்பட்ட நிலம்’ (Cursed Land) என அழைக்கப்பட்ட ஒரு பகுதியிலிருந்து பிரிட்டிஷ் அதிகாரிகளை எதிர்த்துப் போராடும் ஒரு மாவீரனின் கதை.விஜய் தேவரகொண்டாவின் கதாபாத்திரம்: ‘ரணபலி’ என்ற பெயரில் ராவான மற்றும் மிரட்டலான தோற்றத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கிறார்.ராஷ்மிகா மந்தனா: ‘ஜெயம்மா’ (Jayamma) என்ற முக்கிய கதாபாத்திரத்தில் ராஷ்மிகா நடிக்கிறார்.

முக்கிய தகவல்கள்:

இயக்குநர்: ராகுல் சாங்கிருத்யன்.

இசை: அஜய் – அதுல் (Ajay-Atul).

தயாரிப்பு: மைத்ரி மூவி மேக்கர்ஸ்.

வெளியீடு: செப்டம்பர் 11, 2026 அன்று உலகம் முழுவதும் பான்-இந்தியா திரைப்படமாக வெளியாகிறது.

“பிரிட்டிஷ்காரர்கள் அவனை ‘காட்டுமிராண்டி’ (Savage) என்றார்கள். ஆனால் அவன் எங்கள் மாவீரன்” என்ற வாசகத்துடன் வெளியான டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More News

Trending Now