Download App

அஜித்தின் கார் ரேஸ் பயணத்தை ஆவணப்படமாக்கும் விஜய் – ரசிகர்களுக்கு வரப்போகும் மாஸிவ் ட்ரீட்!

December 5, 2025 Published by anbuselvid8bbe9c60f

AK

தமிழ் சினிமாவின் தல அஜித் குமார் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் சர்ப்ரைஸ் காத்திருக்கிறது! இந்த ஆண்டு ‘குட் பேட் அக்லி’ என்ற பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்த அஜித், தற்போது தனது மற்றொரு பெரும் பேஷனான கார் ரேஸிங்கில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் 2025-ஆம் ஆண்டுக்கான ‘ஜென்டில்மேன் டிரைவர்’ விருது அஜித்துக்கு வழங்கப்பட்டது மிகப்பெரிய கௌரவமாக பார்க்கப்படுகிறது. தற்போது மலேசியாவில் நடைபெற்று வரும் சர்வதேச கார் ரேஸ் தொடரிலும் அஜித் பங்கேற்று அசத்தி வருகிறார்.

இந்த நிலையில் ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சிக்கு கொண்டு செல்லும் பிரேக்கிங் நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது – அஜித்தின் கார் ரேஸிங் பயணம் முழுமையாக ஒரு ஆவணப்படமாக உருவாகிறது! இந்த ஆவணப்படத்தை இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்குகிறார் என்பது தான் அதிர்ச்சியும் சந்தோஷமும் தரும் செய்தி.

கடந்த காலத்தில் ‘கிரீடம்’ படத்தின் மூலம் அஜித்தை அசத்தலாக இயக்கிய விஜய், இப்போது தலின் ரேஸிங் உலகத்தை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க உள்ளார். விரைவில் இந்த ஆவணப்படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘AK64’ படத்தின் முன்தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. 2026 பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.