திரைப்பட செய்திகள்

விஷால் நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் ‘புருஷன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு திடீரென தள்ளிவைக்கப்பட்டுள்ளது!

சுந்தர்.சி – விஷால் கூட்டணி ஏற்கனவே ‘ஆம்பள’, ‘ஆக்ஷன்’, ‘மதகஜராஜா’ போன்ற படங்களில் வெற்றி பெற்று ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. குறிப்பாக, 12 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான ‘மதகஜராஜா’ பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, இவர்களின் அடுத்த படம்  ‘புருஷன்’ என அறிவிக்கப்பட்டது.

இந்தப் படத்தில் விஷால் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கிறார். அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் அவரது மகள் அனந்திதா தயாரிக்கின்றனர்.

சமீபத்தில் வெளியான டைட்டில் புரோமோ வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆக்ஷன் கலந்த காமெடி கதையம்சத்துடன் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 2-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக சுந்தர்.சி, விஷால் உள்ளிட்ட படக்குழுவினர் இன்று (ஜனவரி 31) கொல்கத்தா செல்ல இருந்தனர்.

ஆனால், இயக்குநர் சுந்தர்.சிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் படப்பிடிப்பு திடீரென தள்ளிவைக்கப்பட்டுள்ளது. படக்குழு வட்டாரங்கள் இதை உறுதிப்படுத்தியுள்ளன.

படத்தின் படப்பிடிப்பு எப்போது மீண்டும் தொடங்கும் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ரசிகர்கள் விரைவில் படப்பிடிப்பு தொடங்க வேண்டும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

anbuselvid8bbe9c60f

Recent Posts

பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதல்முறையாக, தொடக்க நாளிலேயே பல போட்டியாளர்கள் வெளியேற்றம்

சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…

4 நாட்கள் ago

MP DEVELOPERS நிறுவனத்தின் பிராண்ட் தூதராக சமந்தா ரூத் பிரபு நியமனம்

சென்னையின் பல்லாவரம் மண்ணில் தொடங்கிய இரு வெற்றிப் பயணங்கள்… இனி வளர்ச்சியை நோக்கி ஒரே பாதையில்! சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு…

3 வாரங்கள் ago

நிஜ வாழ்விலும் ‘லெஜண்ட்’ தான்! வறுமையில் வாடிய பாவா லட்சுமணனுக்கு ஓடி வந்து உதவிய லெஜண்ட் சரவணன்!

தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…

3 மாதங்கள் ago

ஓடிடியில் ‘தி லெஜண்ட்’ சரவணனின் அதிரடி வேட்டை: பிரைம் வீடியோவில் ‘லீடர்’ படம் புதிய சாதனை!

தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,

3 மாதங்கள் ago

நடிகர் வாகை சந்திரசேகருக்கு மத்திய அரசின் உயரிய “யுவ புரஸ்கார்” தேசிய விருது அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…

3 மாதங்கள் ago

ஒரு பக்கம் மனதை நெகிழ வைத்த இசை… மறுபக்கம் மாடர்ன் மியூசிக் மேஜிக் – சாம் CS அசத்தல்!

இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.

3 மாதங்கள் ago