திரைப்பட செய்திகள்

“எல்லாமே கருப்ப சாமி பார்த்துகிட்டார்!” – ‘கருப்பு’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக் விழாவில் நடிகர் சூர்யா நெகிழ்ச்சி

சமீபத்தில் வெளியாகி தியேட்டர்களில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று வரும் திரைப்படம் ‘கருப்பு’. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இத்திரைப்படம், பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில், படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இன்று சென்னையில் ‘கருப்பு சக்சஸ் மீட்’ (Success Meet) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சூர்யா, படம் உருவான விதம் மற்றும் தனக்கு கிடைத்த தியேட்டர் ரெஸ்பான்ஸ் குறித்து பல சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

விழாவில் நெகிழ்ச்சியுடன் பேசிய சூர்யா:

“இந்த மாபெரும் வெற்றிக்காக ரசிகர்களுக்கு நேரில் வந்து நன்றி சொல்ல வேண்டும் என்று தோன்றியது. ஆர்.ஜே.பாலாஜி இந்த கதையை என்னிடம் சொன்னபோது, இதில் நடிக்க வேண்டும் என்ற முடிவை வெறும் அரை மணி நேரம் அல்லது முக்கால் மணி நேரத்திலேயே எடுத்துவிட்டேன். அந்த அளவிற்கு கதையில் எல்லாமே சரியாக அமைந்திருந்தது.”

படத்தின் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜியைப் பாராட்டிய சூர்யா, “இந்த படம் முழுக்க முழுக்க ஆர்.ஜே.பாலாஜியின் விஷன்தான். அவர் கதையை விவரிக்கும் போதே, இது தியேட்டரில் ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தையும், ரெஸ்பான்ஸையும் பெறும் என்ற நம்பிக்கை எனக்குள் பிறந்தது. நாம் ஒவ்வொரு படத்தையும் ஒரு நம்பிக்கையில்தான் தொடங்குகிறோம். அதேபோல், முதல் மீட்டிங்கில் இருந்தே இந்த படத்தில் எல்லாமே பாசிட்டிவாக, நன்றாக அமைந்தது” என்று கூறினார்.

படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்த சூர்யா, “இந்த படம் இவ்வளவு நேர்த்தியாக வர அவர்கள்தான் முக்கிய காரணம். மேலும், அனைத்து முடிவுகளையும் சரியாக எடுக்க வைத்த அந்த ‘கருப்ப சாமிக்கு’ என் நெஞ்சார்ந்த நன்றி. இந்த படம் தியேட்டரில் இப்படி ஒரு மேஜிக் நிகழ்த்த வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன், அது இன்று நடந்திருக்கிறது” என்றார்.

நான் எதிர்பார்த்ததை விட மிகப்பாரிய வெற்றியை இந்த படம் கொடுத்துள்ளது. சமீப காலங்களில் தியேட்டர்களில் ரசிகர்கள் இப்படி கொண்டாடுவதை (Reaction) நான் பார்த்ததே இல்லை. தமிழ்நாடு மட்டுமின்றி, மற்ற மாநிலங்களிலும், உலகளவிலும் இந்தப் படம் அனைத்து தரப்பு மக்களுடனும் மிகச்சிறப்பாக கனெக்ட் ஆகியிருக்கிறது” என சூர்யா மகிழ்ச்சியுடன் பேசினார்.

‘கருப்பு’ படத்தின் இந்த அதிரடி வெற்றி, படக்குழுவினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Natarajan Karuppiah

Recent Posts

பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதல்முறையாக, தொடக்க நாளிலேயே பல போட்டியாளர்கள் வெளியேற்றம்

சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…

4 நாட்கள் ago

MP DEVELOPERS நிறுவனத்தின் பிராண்ட் தூதராக சமந்தா ரூத் பிரபு நியமனம்

சென்னையின் பல்லாவரம் மண்ணில் தொடங்கிய இரு வெற்றிப் பயணங்கள்… இனி வளர்ச்சியை நோக்கி ஒரே பாதையில்! சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு…

3 வாரங்கள் ago

நிஜ வாழ்விலும் ‘லெஜண்ட்’ தான்! வறுமையில் வாடிய பாவா லட்சுமணனுக்கு ஓடி வந்து உதவிய லெஜண்ட் சரவணன்!

தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…

3 மாதங்கள் ago

ஓடிடியில் ‘தி லெஜண்ட்’ சரவணனின் அதிரடி வேட்டை: பிரைம் வீடியோவில் ‘லீடர்’ படம் புதிய சாதனை!

தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,

3 மாதங்கள் ago

நடிகர் வாகை சந்திரசேகருக்கு மத்திய அரசின் உயரிய “யுவ புரஸ்கார்” தேசிய விருது அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…

3 மாதங்கள் ago

ஒரு பக்கம் மனதை நெகிழ வைத்த இசை… மறுபக்கம் மாடர்ன் மியூசிக் மேஜிக் – சாம் CS அசத்தல்!

இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.

3 மாதங்கள் ago