டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: விஜய் இரங்கல்
கார்த்திகை 11, 2025 Published by Natarajan Karuppiah

டெல்லியின் செங்கோட்டை (Red Fort) அருகிலுள்ள மெட்ரோ நிலையத்திற்கு அருகில் ஒரு காரில் வெடிப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர். வெடிப்பு காரணமாக அந்தப் பகுதியில் கூடியிருந்த மக்கள் அலறியடித்து சிதறி ஓடினர்.
டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது, இச்சம்பவம் குறித்து தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய், தனது X (முன்னாள் ட்விட்டர்) கணக்கில் பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது முழு பதிவு:டெல்லி செங்கோட்டை மெட்ரோ அருகே கார் வெடிப்புச் செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.என பதிவு செய்திருந்தார்
















