Download App

நடிகை சமந்தா ரூத் பிரபு, இயக்குநர் ராஜ்நிதிமோருவுடன் திருமணம்

மார்கழி 1, 2025 Published by Natarajan Karuppiah

தமிழ், தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகை சமந்தா ரூத் பிரபு, இயக்குநர் ராஜ்நிதிமோருவுடன் இன்று அதிகாலையில் ஈஷா யோகா அறக்கட்டளையின் லிங்க பைரவி கோயிலில் திருமணம் செய்துகொண்டார். இந்த ரகசிய திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே 30 பேர் அளவுக்கு பங்கேற்றனர்.

பிரபல ஊடகங்களின் வாயிலாக தகவல்கள் கசிந்துள்ளன . இந்தத் தம்பதியினர் ‘தி ஃபேமிலி மேன்’ 2 மற்றும் ‘சிடாடெல்: ஹனி பன்னி’ போன்ற திட்டங்களில் ஒன்றாகப் பணியாற்றியதால் அவர்களுக்கிடையேயான நட்பு காதலாக மாறியது. 2024 முதல் இவர்களின் உறவு குறித்து வதந்திகள் பரவின, சமந்தாவின் சமூக ஊடகப் பதிவுகள் அதை உறுதிப்படுத்தின.

ராஜ் நிதிமோருவின் முன்னாள் மனைவி ஷ்யாமலி தே, நேற்றிரவு இன்ஸ்டாகிராமில் “தீவிரமானவர்கள் தீவிரமான செயல்கள் செய்வார்கள்” என்ற மேற்கோள் பகிர்ந்தது, வதந்திகளுக்கு தீர்வு கொடுத்தது. சமந்தா 2021இல் நாக சைதன்யாவுடன் விவாகரத்து செய்தபின் இது அவரது இரண்டாவது திருமணம். ராஜ் 2022இல் ஷ்யாமலியுடன் பிரிந்தார்.

இதுவரை இருவரும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை, ஆனால் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமந்தாவின் அடுத்த படங்கள் ‘ரக்த் பிரம்மாண்டம்’ உள்ளிட்டவை. இந்தத் திருமணம் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான செய்திகளில் ஒன்றாக அமைந்துள்ளது!

More News

Trending Now