தல அஜித் குமார் ரசிகர்களுக்கு பெரும் சர்ப்ரைஸ்! 2004-ல் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ‘அட்டகாசம்’ திரைப்படம் வரும் நவம்பர் 28-ம் தேதி முதல் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸாக உள்ளது.
சரண் இயக்கத்தில், விஜயம் சினி கம்பைன்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் (குரு மற்றும் ஜீவா) நடித்திருப்பது திருப்புமுனையாக அமைந்தது. பூஜா, சுஜாதா, பாபு அந்தோணி, மஹாதேவன், நிழல்கள் ரவி, ரமேஷ் கண்ணா மற்றும் இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பரத்வாஜ் இசையமைத்த இப்படம் வெளியான போதே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
தற்போது அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்குப் பிறகு அவரது அடுத்த புதிய படம் (ஏ.கே.62) கார் ரேஸிங் பயிற்சி காரணமாக தாமதமாகும் நிலையில், ‘அட்டகாசம்’ ரீ-ரிலீஸ் அறிவிப்பு ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ‘அட்டகாசம்’ ரீ-ரிலீஸ் டிரெய்லர் இன்று வெளியாகி சமூக வலைதளங்களில் புயலாகப் பரவி வருகிறது. ஐஎப்பிஏ மேக்ஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் பிரியா நாயர் இப்படத்தை மறு வெளியீடு செய்கிறார்.
நவம்பர் 28 முதல் தலயின் அட்டகாசமான இரட்டை வேட திரைக்காவல் மீண்டும் திரையரங்குகளில்! #AttagasamReRelease #ThalaAjith
சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…
சென்னையின் பல்லாவரம் மண்ணில் தொடங்கிய இரு வெற்றிப் பயணங்கள்… இனி வளர்ச்சியை நோக்கி ஒரே பாதையில்! சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு…
தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…
தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,
தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…
இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.