கனியின் தங்கை விஜயலட்சுமி வழங்கிய கடுமையான அட்வைஸ் – எமோஷனல் கனி!
December 23, 2025 Published by anbuselvid8bbe9c60f

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது 77 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த வார இறுதியில் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ மற்றும் ஆதிரை வெளியேறிய நிலையில், வீட்டிற்குள் புதிய உற்சாகம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாரம் வீட்டுத் தலைவராக கம்ருதீன் செயல்படுகிறார். தற்போது பிக் பாஸ் வீட்டில் ‘ஃப்ரீஸ்’ (Freeze) டாஸ்க் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் வீட்டிற்கு வந்து செல்கின்றனர்.

நேற்று (டிசம்பர் 22) சாண்ட்ராவின் குழந்தைகளும், பிரஜினும் வீட்டிற்கு வந்திருந்தனர். இன்று வெளியான முதல் புரொமோவில் வினோத்தின் மனைவியும் குழந்தைகளும் வந்திருந்த காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில், போட்டியாளர் கனி திருவை சந்திக்க அவரது தங்கை விஜயலட்சுமி பிக் பாஸ் வீட்டிற்கு வந்தார். விஜயலட்சுமியைப் பார்த்ததும் கனி எமோஷனலாகி கண்ணீர் விட்டு அழுதார்.

பின்னர் விஜயலட்சுமி கனிக்கு முக்கியமான அட்வைஸ் வழங்கினார். “நீ பண்ற விஷயங்கள் எதுவுமே 1 மணி நேரம் போடுற ஷோல வரமாட்டிங்குது. நல்லவளா இருக்கிறதைக் காட்டிக்கிட்டே இருக்க முடியாது. ஸ்மார்ட்டா விளையாடு. உனக்கு இந்த அன்பு வேணாம். நல்ல பேர் வாங்கிறதோ, ஹவுஸ் மேட்ஸ் பக்கத்துல உட்கார்றதோ இன்டலிஜென்ட் இல்ல. இந்த கேம் ஒரு என்டர்டெயின்மென்ட், அதைக் கொடுக்கணும் அதுதான் இன்டெலிஜென்ட்” என்று கடுமையாக அறிவுறுத்தினார்.

இந்த எமோஷனல் சந்திப்பும் அட்வைஸும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஃப்ரீஸ் டாஸ்க் தொடர்ந்து கொண்டிருப்பதால், மேலும் பல குடும்ப உறுப்பினர்களின் வருகை எதிர்பார்க்கப்படுகிறது.





















