கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்த ‘படைத்தலைவன்’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், இந்தப் படத்திற்கு சாதகமான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சண்முக பாண்டியன் மற்றும் அவரது சகோதரர் விஜய பிரபாகரன் ஆகியோர் தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டனர்.
அப்போது சண்முக பாண்டியன் கூறுகையில், “இந்த படத்திற்கு மக்கள் அனைவரும் ஆதரவு கொடுங்கள். நான் எப்படி நடித்திருக்கிறேன் என்று சொல்லுங்கள். அதற்கப்புறம் மற்றதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம்,” என்று கண்ணீருடன் கூறினார்.
அதன் பிறகு விஜய பிரபாகரன் பேசினார். எனது தம்பியின் கண்ணீருக்கு ஒரு காரணம் இருக்கிறது. சண்முக பாண்டியன் 2013 ஆம் ஆண்டு நடிக்க வந்தார். 12 வருஷம் கழித்து இன்றுதான் மூன்றாவது படம் ரிலீஸ் ஆகிறது. கேப்டன் உடல்நிலை சரியில்லாத போது, ‘எனக்குப் படமும் வேண்டாம், எதுவும் வேண்டாம், அப்பாவை நன்றாக குணப்படுத்தி மக்கள் முன் நிறுத்த வேண்டும்’ என்பதிலேயே குறியாக இருந்தார். அதனால் தான் அவர் எந்தப் படமும் ஒப்புக்கொள்ளவில்லை. இருந்தாலும் அப்பாவை காப்பாற்ற முடியவில்லை.”
“கேப்டன் உங்கள் சொத்து. நான் எல்லா மேடையிலும் சொல்வதுதான், கேட்பது எங்கள் உரிமை, கொடுப்பது உங்கள் கடமை. சண்முக பாண்டியனை கொண்டாடுங்கள். எங்கள் அப்பா எங்களை உங்களுக்காகத்தான் விட்டுச் சென்று இருக்கிறார். மக்களுக்கான பணிகளை தொடர்ந்து செய்வோம்,” என்று தெரிவித்தார்.
திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு கூட்டணி, தனது முதல் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வேகமாக உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் முக்கிய…
நடிகர் விஜயகாந்தின் இளைய மகனும், நடிகருமான சண்முக பாண்டியன் நடிப்பில், பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொம்புசீவி' திரைப்படம் இன்று (டிசம்பர்…
உலகப் புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞரும், இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா பெற்ற முதல் இசைக் கலைஞருமான எம்.எஸ்.சுப்புலட்சுமியின்…
தளபதி விஜய் நடிப்பில், கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’…
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது அடுத்தடுத்து பிரம்மாண்டமான திட்டங்களில் பிஸியாக உள்ளார்.