Download App

பிக் பாஸ் சீசன் 9: மகுடம் சூடினார் திவ்யா கணேஷ்!

தை 19, 2026 Published by Natarajan Karuppiah

தமிழ் சின்னத்திரையின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் 9 விறுவிறுப்பான கட்டத்தை எட்டி, தற்போது அதன் வெற்றியாளரை அறிவித்துள்ளது. பலமான போட்டியாளர்களுக்கு மத்தியில், மக்கள் செல்வாக்கைப் பெற்று இந்த சீசனின் டைட்டில் வின்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் திவ்யா கணேஷ். இறுதிப்போட்டியில் சபரினாதன், விக்கல்ஸ் விக்ரம் மற்றும் அரோரா ஆகியோரை பின்னுக்குத் தள்ளி திவ்யா முதலிடம் பிடித்தார். இவருக்கு வெற்றிக்கோப்பையுடன் ரூ. 50 லட்சம் ரொக்கப்பரிசு மற்றும் ஒரு புதிய கார் வழங்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் பிக் பாஸ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லை திவ்யா எட்டியுள்ளார். பொதுவாக ஆரம்பம் முதலே வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்ற பிம்பத்தை உடைத்து, வைல்டு கார்டு (Wild Card) போட்டியாளராக உள்ளே நுழைந்து கோப்பையை வென்றுள்ளார்.

பிக் பாஸ் தமிழ் வரலாற்றில் ஒரு வைல்டு கார்டு போட்டியாளர் டைட்டில் வெல்வது இது இரண்டாவது முறையாகும்.இதற்கு முன் சீசன் 7-ல் அர்ச்சனா ரவிச்சந்திரன் வைல்டு கார்டு போட்டியாளராக நுழைந்து முதல்முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தார்.இப்போது சீசன் 9-ல் அதே சாதனையை திவ்யா கணேஷ் மீண்டும் நிகழ்த்தியுள்ளார்.

ஆரம்பத்தில் அமைதியாகத் தொடங்கினாலும், போகப்போக டாஸ்க்குகளில் காட்டிய வேகம், சக போட்டியாளர்களுடனான நேர்மையான அணுகுமுறை மற்றும் இக்கட்டான சூழல்களைக் கையாண்ட விதம் ஆகியவை ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தன. சமூக வலைத்தளங்களில் இவருக்கான ஆதரவு அலை கடைசி வாரங்களில் பல மடங்கு அதிகரித்தது.

வெற்றி மேடையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிடம் இருந்து வெற்றிக் கோப்பையைப் பெற்றுக்கொண்ட திவ்யா கணேஷிற்கு, ரூ. 50 லட்சம் பரிசுத் தொகையும், புதிய காரும் வழங்கப்பட்டது.

தாமதமாக உள்ளே வந்தாலும், மக்களின் இதயங்களை வெல்ல நேரம் ஒரு தடையல்ல” என்பதை திவ்யா கணேஷ் நிரூபித்துக் காட்டியுள்ளார்.உலகநாயகன் கமல்ஹாசனுக்குப் பிறகு, இந்த சீசனை வழிநடத்திய விஜய் சேதுபதி, போட்டியாளர்களைக் கையாண்ட விதமும், “யாரையும் புண்படுத்தாமல் உண்மையைச் சுட்டிக்காட்டிய” விதமும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இறுதி மேடையில் திவ்யாவின் கையை உயர்த்தி வெற்றியை அறிவித்த தருணம் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான ஒன்றாக அமைந்தது.

Trending Now

No trending articles in this category from the last 3 days.