Download App

100 ஜென்மங்கள் எடுத்தாலும் மீண்டும் நடிகர் ரஜினிகாந்த்தாகவே பிறக்க விரும்புகிறேன்.

கார்த்திகை 29, 2025 Published by Natarajan Karuppiah

கோவா சர்வதேச திரைப்பட விழாவின் (IFFI 2025) 56-வது பதிப்பில், இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டாரும், உலகளாவிய ரசிகர் பட்டாளத்தின் அபிமான நாயகனுமான நடிகர் ரஜினிகாந்துக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது. மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் மேடையில் வைத்து இந்த விருதை வழங்கினர்.

விருது பெற்ற பிறகு உருக்கமாகவும், தனது பாணியிலேயே நகைச்சுவையோடும் பேசிய ரஜினிகாந்த்,“நான் நடிப்பையும் சினிமாவையும் ரொம்ப காதலிக்கிறேன். 100 ஜென்மம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் ஒரு நடிகனாக, ரஜினிகாந்தாகவே பிறக்க விரும்புகிறேன்!” இந்தப் பெருமையானது சினிமாத்துறை மற்றும் அதில் இருக்கும் எல்லோருக்குமானது. குறிப்பாக என்னை வாழவைக்கும் தெய்வங்களான மக்களுக்கானது” என்று கூறினார்.

கோவாவின் மேடையில் நின்று கொண்டிருந்த ரஜினி, தனது ரசிகர்களுக்கும் திரையுலகுக்கும் ஒரு உறுதியான செய்தியைச் சொன்னார்: “இது முடிவல்ல… இது தொடக்கம்தான்!” என்று சிரித்தபடியே முடித்தார்.

ரஜினிகாந்த் என்றொரு நடிகன் மட்டுமல்ல, ஒரு உணர்வு, ஒரு நம்பிக்கை, ஒரு கனவு என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டார் கோவா திரைப்பட விழா.தலைவா… எத்தனை ஜென்மம் வேண்டுமானாலும் வாங்க… நாங்கள் உங்களுக்காகக் காத்துக் கொண்டிருப்போம்!

More News

Trending Now

No trending articles in this category from the last 3 days.