“இனி வாழ்நாள் முழுக்க உன்கிட்ட பேச மாட்டேன் பாரு” – கம்ருதீன் ஆவேசம்: பார்வதியுடன் உச்சகட்ட மோதல்!
December 22, 2025 Published by anbuselvid8bbe9c60f

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி 77 நாட்களை கடந்து தீவிர போட்டியாக நடந்து வருகிறது. நேற்று (டிசம்பர் 21) நடந்த டபுள் எவிக்ஷனில் FJ மற்றும் ஆதிரை வெளியேறியுள்ளனர். இதனால் வீட்டுக்குள் உணர்வுகள் கொந்தளிப்பில் உள்ளன.
இந்த வாரத்திற்கான வீட்டுத் தலைவராக கம்ருதீன் செயல்பட்டு வருகிறார். வீட்டில் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற உள்ள நிலையில், இன்று (டிசம்பர் 22) வெளியான புரொமோக்களில் கம்ருதீனுக்கும் வி.ஜே. பார்வதி (பாரு)க்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்துள்ளது.

முதல் புரொமோவில், வினோத் மற்றும் அமித்திடம் பேசிய கம்ருதீன், “மறுபடியும் என்னை ஏமாத்திடுவான்னு எனக்கு பயமா இருக்கு. ஏற்கனவே திவாகர் பேச்சை கேட்டு என் பேரை கெடுத்திட்டா. பேட் டச்சுன்னு சொன்னா. ஆனா அம்மா சத்தியமா நான் எதுவும் பண்ணல” என்று பாருவை குற்றம்சாட்டினார்.
இதைக்கேட்ட பார்வதி, “என்னென்னமோ பேசுறான். ஃபேமிலி வர்றதுக்காக இதெல்லாம் மறுபடியும் பேசுறான்” என்று பதிலடி கொடுத்தார். உடனே கம்ருதீன், “என் வாழ்க்கையைப் பத்தி நீ யோசிச்சியா?” என கேள்வி எழுப்பினார்.

இரண்டாவது புரொமோவில், “அன்னைக்கு எனக்கு என்ன தோணுச்சோ அதை நான் உன்கிட்ட வெளிப்படுத்திட்டேன்” என்று பார்வதி கூற, கம்ருதீன் கோபத்தில் கொந்தளித்தார். “ஏன் இப்படி கோவப்படுற?” என பார்வதி கேட்க, “இனி வாழ்நாள் முழுசும் உன்கிட்ட பேசமாட்டேன் பாரு” என கம்ருதீன் காட்டமாக பதிலளித்தார்.
இந்த வாக்குவாதம் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஃப்ரீஸ் டாஸ்க்கில் இது எப்படி பிரதிபலிக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.





















