‘ஜனநாயகன்’ தணிக்கை சர்ச்சை: பல காட்சிகள் நீக்கம், வசனங்கள் மியூட் – டிரெய்லர் டிச.31 இரவு வெளியீடு?
மார்கழி 29, 2025 Published by anbuselvid8bbe9c60f

நடிகர் தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்‘ (ஜனவரி 9, 2026 வெளியீடு) தணிக்கை பணிகளில் சிக்கியுள்ளது. சமீபத்தில் தணிக்கைக்கு அனுப்பப்பட்ட படத்தை பார்த்த CBFC அதிகாரிகள், பல்வேறு காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை மியூட் செய்யவும் அறிவுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக, சண்டைக் காட்சிகளில் ரத்தம் தெறிக்கும் காட்சிகளை குறைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. சில அறிக்கைகளின்படி, சுமார் 64 கட்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதால், படம் ‘A’ சான்றிதழ் பெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் பரவுகின்றன. இந்த மாற்றங்களை செய்து மீண்டும் தணிக்கைக்கு அனுப்ப படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்பணிகள் இன்றுடன் (டிசம்பர் 29) முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், டிசம்பர் 31 இரவு புத்தாண்டு கொண்டாட்டமாக ‘ஜனநாயகன்‘ டிரெய்லரை வெளியிடலாம் என படக்குழு ஆலோசனை நடத்தி வருகிறது. இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில், பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கெளதம் மேனன், பிரியாமணி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை கே.வி.என் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. ஒளிப்பதிவு: சத்யன் சூரியன், இசை: அனிருத் ரவிச்சந்தர்.

விஜய்யின் இறுதிப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், தணிக்கை சிக்கல் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!



















