தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் கமல்ஹாசன் மற்றும் தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் இணையும் புதிய படம் குறித்த பேச்சுவார்த்தை தற்போது தீவிரமாக நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் இதற்கு முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், இது தொடர்பான சந்திப்புகள் நடைபெற்றுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு (சிலம்பரசன்) நடித்து வரும் ‘அரசன்‘ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் நிறைவடைந்துள்ளது. கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் அரங்குகளில் நடைபெற உள்ளது. ‘அரசன்’ படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறனின் அடுத்த திட்டம் என்ன என்பது இன்னும் உறுதியாகவில்லை.
இந்நிலையில், கமல்ஹாசனை வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்தக் கூட்டணி உறுதியானால் தமிழ் சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என ரசிகர்கள் கருதுகின்றனர். இது தொடர்பான செய்திகள் இணையத்தில் வெளியானதில் இருந்து, பலரும் இந்தக் கூட்டணிக்காக காத்திருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
கமல்ஹாசன் தற்போது அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்தில் கவனம் செலுத்த உள்ளார். அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் படத்தில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்து படக்குழு தரப்பில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ரசிகர்கள் இந்த ட்ரீம் கூட்டணிக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்!
நடிகர் தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' (ஜனவரி 9, 2026 வெளியீடு) தணிக்கை பணிகளில் சிக்கியுள்ளது.
தேசிய விருது பெற்ற இயக்குநர் சுதா கொங்காரா , சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஐ வைத்து ஒரு முழுமையான காதல் படம்…
இயக்குநர் வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படத்தின் முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து…
ஹேமந்த் எம். ராவ் இயக்கத்தில் உருவாகும் '666 ஆபரேஷன் ட்ரீம் தியேட்டர்' படத்தில் பிரியங்கா மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இன்று வெளியான முதல் புரொமோவில், விக்கல்ஸ் விக்ரம் திவ்யா கணேஷை நாமினேட் செய்து கடுமையாக விமர்சித்துள்ளார்.
நடிகர் சூர்யாவின் 46வது படமான இந்தத் திரைப்படம், வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி வருகிறது.