Download App

கார்த்தி – க்ரித்தி ஷெட்டியின் ‘வா வாத்தியார்’ டிசம்பர் 12-ஆம் தேதி வெளியீடு!

December 3, 2025 Published by Natarajan Karuppiah

நடிகர் கார்த்தி மற்றும் நடிகை க்ரித்தி ஷெட்டி ஆகியோர் இணைந்து நடித்துள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ஆக்‌ஷன் கலந்த நகைச்சுவைத் திரைப்படம், வரும் டிசம்பர் 12, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. முன்னதாக டிசம்பர் 5-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரு வாரம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்தத் திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.