Download App
அதர்ஸ்

Others

Cast: Jagan, Gouri G. Kishan, Anju Kurian, Aditya Madhavan, Munishkanth, Maala Parvathi, Harish Peradi, Vinoth Sagar, R. Sundarajan

Director: Abin Hariharan

Music Director: Ghibran Vaibodha

Producer: Murali

அதர்ஸ் திரை விமர்சனம்

Published November 7, 2025 by anbuselvid8bbe9c60f

others1

அதர்ஸ்: இதுவரை சொல்லப்படாத மெடிக்கல் கிரைம்.

கிராண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அப் 7 வெஞ்சர்ஸ் ஆதிராஜ் புருஷோத்தமன் இணைந்து தயாரித்துள்ளார். அபின் ஹரிஹரன் இயக்கியுள்ள திரைப்படம் ” அதர்ஸ்”.  ஆதித்யா மாதவன், கௌரி கிஷன் , அஞ்சு குரியன், முனீஷ்காந்த், ஹரீஷ் பேரடி, மாளா பார்வதி, ஜகன், R.சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கிறது.

ஒரு திருடனால் விபத்துக்கு உள்ளாக்கப்பட்டு வெடிக்கும் ஒரு வேன். அதில் கொல்லப்படும் நால்வர் உடன் திருடனும் சேர்ந்து இறந்து கிடக்க அதை சுற்றி நகரும் கதை. இதை விசாரிக்க வருகிறார் காவலர் மாதவன் ( ஆதித்யா மாதவன்). அவருக்கு ஜோடி மற்றும் மகப்பேறு மருத்துவராக டாக்டர் மதுமிதா ( கௌரி கிஷன்) . ஒரு பக்கம் இந்த விபத்துக்கான காரணம் தேடி அலைகிறார் மாதவன், இன்னொரு புறம் தனது மருத்துவமனையிலேயே செயற்கை கருத்தரிப்பில் நிகழும் ஒரு அநியாயம் குறித்து மருத்துவமனையில் கேள்வி எழுப்பி வருகிறார் மதுமிதா. இவ்விரண்டு பிரச்சனைகளும் ஓரிடத்தில் சேரும் புள்ளிதான் படத்தின் கிளைமாக்ஸ்.

நாயகன் ஆதித்யா மாதவன், முதல் படம் போலவே இல்லை, எங்கேயோ பார்த்த ஞாபகம் இருக்கிறது என்பது போல் பழகிப்போன முகமாக கவனம் பெறுகிறார். கௌரி கிஷன் மருத்துவராகவும், கதையில் முக்கியமான கதாபாத்திரமாகவும் நடித்திருக்கிறார். முனிஷ்காந்த், ஜெகன், சுந்தர்ராஜன் , ஹரிஷ் பேராடி உள்ளிட்டோர் தங்களுக்கான பாத்திரத்தை அழகான நடிப்பில் அருமையாக கொடுத்திருக்கிறார்கள். கதையின் மிக முக்கிய புள்ளியாகவும் கருவாகவும் வேதா கதாபாத்திரத்தில் நடித்த சுமேஷ் மூர் இதற்கு முன்பு ” இந்திரா” படத்திலும் வித்தியாசமான சைக்கோ கதாபாத்திரத்தில் கவனம் பெற்றார். இந்தப் படத்தில் வேதா கதாபாத்திரத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மருத்துவ துறையில் இதுவரை யாரும் பேசாத எடுத்து வைக்காத பிரச்சனையை கதையாக யோசித்ததற்கு இயக்குனருக்கு பாராட்டுக்கள். மேலும் திரைக்கதையாகவும் விறுவிறுப்பாக நகர்த்தி நல்லதொரு மெடிக்கல் கிரைம் திரைப்படத்தை கொடுத்திருக்கிறார். ” குற்றம் 23″ போன்ற படங்கள் ஆங்காங்கே ஞாபகம் வந்தாலும் முடிவில் இந்த கதை முற்றிலுமாக வேறு ஒரு கதையாக நிற்கிறது. குறிப்பாக படத்தின் தலைப்பு ” அதர்ஸ் ” என வைக்கப்பட்ட இடமும் சிறப்பு.

இரண்டாம் பாதியில் இருந்த விறுவிறுப்பையும் விசாரணையின் வேகத்தையும் முந்தைய பாதியிலேயே கொடுத்திருந்தால் இன்னும் குறை இல்லாமல் இருந்திருக்கும். ஒரு சில உண்மை சம்பவங்களையும் கதையின் இறுதியில் அல்லது கதைக்குள் எங்கேயாவது பொருத்தி இருக்கலாம். இன்னும் காரணங்கள் வலுவானதாக மாறியிருக்கும்.

கதைக்கு மிகப்பெரிய பலம் ஜிப்ரான் பின்னணி இசை. ” ராட்சசன் ” படம் போலவே இந்த படத்திலும் தனது இருப்பை நிரூபித்திருக்கிறார். அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவு ,லைட்டிங், குறிப்பாக சாலைகளில் நிகழும் காட்சிகள் தெரு விளக்கு வெளிச்சத்தில் அருமையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மொத்ததில், இதுவரையிலும் தமிழ் சினிமாவில் யாரும் எடுத்து வைக்காத ஒரு மருத்துவ பிரச்சனையை எடுத்து வைத்து அதில் விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து நம்மையும் சிந்திக்க வைக்கிறது “அதர்ஸ்” திரைப்படம்.

Rating: (3.25/5)

[lai_inner_right_top]

More News

No categories found.

Trending Now