Download App

‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் அடுத்தப் படம்: சிவகார்த்திகேயனுடன் கூட்டணி!

தை 6, 2026 Published by anbuselvid8bbe9c60f

ramkumarsk

‘பார்க்கிங்’ திரைப்படத்தின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், ரஜினிகாந்தின் ‘தலைவர் 173’ படத்தை இயக்கும் வாய்ப்பை இழந்த நிலையில், தற்போது புதிய திட்டங்களுடன் முன்னேறி வருகிறார்.

ரஜினியின் 173வது படத்தை இயக்குவதற்கு ராம்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், இறுதியில் ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி தான் இயக்குநராக உறுதி செய்யப்பட்டார். இதனால் ராம்குமாரின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ராம்குமார் சிவகார்த்திகேயனை சந்தித்து ஒரு கதை விவாதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை சாந்தி டாக்கீஸ் தயாரிக்க முன்வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், ரஜினி படத்துக்கு முன்பு டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிம்பு நடிக்க திட்டமிடப்பட்ட படம் இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், சிம்பு ராம்குமாருடன் தொலைபேசியில் பேசி, வேறு தயாரிப்பாளரை வைத்து அந்தப் படத்தை தொடங்கலாம் என்று ஆலோசித்துள்ளதாக தெரிகிறது.

இதன்மூலம் ராம்குமாரின் அடுத்த படம் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயன் – ராம்குமார் கூட்டணி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது!

More News

Trending Now