Download App

பிக் பாஸ் தமிழ் சீசன் 9: பார்வதிக்கு அம்மா கொடுத்த அட்வைஸ் – அரோராவை ‘விஷப்பாம்பு’ என விமர்சனம்! புதிய புரொமோ வைரல்

மார்கழி 26, 2025 Published by anbuselvid8bbe9c60f

bb

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது 81 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த வார வீட்டுத் தலைவராக கம்ருதீன் செயல்பட்டு வரும் நிலையில், வீட்டில் ‘ஃப்ரீஸ்’ (ஃபேமிலி ரவுண்ட்) டாஸ்க் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுவரை வினோத், சபரி, கனி, அமித், திவ்யா, பார்வதி, கம்ருதீன், அரோரா உள்ளிட்டோரின் குடும்ப உறுப்பினர்கள் வீட்டிற்கு வந்த நிலையில், சமீபத்திய புரொமோக்களில் விக்ரம் மற்றும் சுபிக்ஷாவின் குடும்பத்தினரும் வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள புதிய புரொமோவில் வி.ஜே. பார்வதி தனது அம்மாவுடன் உரையாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதில் பார்வதி, “நாங்க (கம்ருதீன் – பார்வதி) தனித்தனியா தான் விளையாடுறோம். ஆனா சேர்ந்து இருக்கனால தனித்தனியா விளையாடுற மாதிரி தெரியாம இருக்கலாம்” என்று கூறுகிறார்.

bb1

இதற்கு பதிலளித்த பார்வதியின் அம்மா, “ஒரு ஆணும், பொண்ணும் சேர்ந்து இருக்கிறது இயல்புதான். ஆனா அதைக் கொச்சைப்படுத்த வேண்டாம். கேம்ல இருந்து நீ சில விஷயங்களைக் கத்துக்கணும்” என்று அட்வைஸ் கொடுக்கிறார்.

மேலும், பார்வதி தனது அம்மாவிடம், “அரோராவை என்னைக்குமே நான் நம்புனது இல்ல. அது ஒரு நல்ல பாம்பே கிடையாது. சரியான விஷப்பாம்பு” என்று கடுமையாக விமர்சித்துப் பேசுகிறார்.

bb2

இந்த உரையாடல் புரொமோ வெளியானதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாகி வருகிறது. பார்வதி – கம்ருதீன் இடையேயான நெருக்கம் குறித்த சர்ச்சைகள் தொடர்ந்து பேசப்படும் நிலையில், அம்மாவின் அட்வைஸும் அரோரா மீதான விமர்சனமும் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் ஃப்ரீஸ் டாஸ்க் மூலம் உணர்ச்சிகரமான தருணங்கள் தொடர்கின்றன. அடுத்த எபிசோடில் என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்!

More News

Trending Now