Download App

சிம்பு வெளிப்படையாக மனம் திறந்த திருமண பேச்சு இணையத்தில் வைரல்!

December 8, 2025 Published by anbuselvid8bbe9c60f

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிலம்பரசன் (சிம்பு) தற்போது தனது திருமணம் குறித்து வெளிப்படையாகப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் உருவாகிவரும் ‘அரசன்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சிம்பு, அடுத்ததாக STR 49 படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற கார் ரேஸ் நிகழ்ச்சியில் நடிகர் அஜித்தை சந்தித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

இதற்கிடையே, திருமணம் பற்றி நீண்ட நாட்களாக ரசிகர்களால் கேட்கப்பட்டு வந்த கேள்விக்கு சிம்பு இப்போது தெளிவாகவும், ஆழமாகவும் பதிலளித்துள்ளார்.

அவர் கூறியதாவது: “திருமணம் நடக்கும்போது நடக்கும். தனியா இருக்கிறதும், யாரோட இருக்கிறதும் மேட்டர் கிடையாது. நீங்க ஒழுங்கா, நிம்மதியா இருக்கீங்களா என்பதுதான் மேட்டர். சந்தோஷமா bedside இருக்கீங்களா? நாலு பேரை நிம்மதியா பார்த்து கொள்கிறீங்களா? அது போதும். நான் இப்போ இப்படி பேச காரணமே ரொம்ப வாழ்க்கையில் அடிவாங்கி இருக்கேன்.”

தனது வாழ்க்கையில் பட்ட துன்பங்களையும், அனுபவங்களையும் மனம் திறந்து பகிர்ந்த சிம்புவின் இந்தப் பேச்சு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. “முதிர்ச்சியான சிம்பு பேசுகிறார்” என்பது போன்ற கருத்துகள் இணையத்தில் பரவலாகப் பகிரப்படுகின்றன.

‘வடசென்னை’ உலகில் உருவாகிவரும் ‘அரசன்’ படத்திற்காகவும், தனிப்பட்ட வாழ்க்கையில் இந்த அமைதியான முதிர்ச்சிக்காகவும் சிம்புவை ரசிகர்கள் மேலும் கொண்டாடி வருகின்றனர்.