₹40 கோடி சாட்டிலைட் டீல் முடிச்சாச்சு! ஜனநாயகன் புது ரெக்கார்ட் !

தளபதி விஜய்யின் கடைசி படத்திற்கு மற்றொரு மாஸிவ் ரெக்கார்ட்!

தளபதி விஜய்யின் நடிப்பில் இறுதியாக வரவிருக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் 2026 ஜனவரி 9-ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் ப்ரீ-பிசினஸ் ஏற்கனவே பட்டையைக் கிளப்பி வரும் நிலையில், தியேட்டர் மட்டும் ரூ.500 கோடிக்கு மேல் வசூலாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இதுவரை விற்பனையாகாமல் இருந்த சாட்டிலைட் உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான ஜீ தமிழ் கைப்பற்றியுள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

தகவலின்படி, தமிழக சாட்டிலைட் உரிமையை மட்டும் ரூ.40 கோடிக்கு ஜீ நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது உறுதியானால், தமிழ் சினிமாவில் ஒரு நடிகரின் கடைசிப் படத்திற்கு கிடைத்த மிக உயர்வான சாட்டிலைட் டீல்களில் ஒன்றாக இது அமையும்.

ஏற்கனவே ஓடிடி உரிமையும் பிரம்மாண்ட தொகைக்கு விற்பனையாகியுள்ள நிலையில், ஜனநாயகன் படத்தின் ஒவ்வொரு உரிமையும் புதிய சாதனைகளை பதிவு செய்து வருகிறது.

2026 பொங்கல் கொண்டாட்டத்தை தளபதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ மிரட்டலாக தொடங்கவுள்ளது!

anbuselvid8bbe9c60f

Recent Posts

பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதல்முறையாக, தொடக்க நாளிலேயே பல போட்டியாளர்கள் வெளியேற்றம்

சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…

7 நாட்கள் ago

MP DEVELOPERS நிறுவனத்தின் பிராண்ட் தூதராக சமந்தா ரூத் பிரபு நியமனம்

சென்னையின் பல்லாவரம் மண்ணில் தொடங்கிய இரு வெற்றிப் பயணங்கள்… இனி வளர்ச்சியை நோக்கி ஒரே பாதையில்! சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு…

4 வாரங்கள் ago

நிஜ வாழ்விலும் ‘லெஜண்ட்’ தான்! வறுமையில் வாடிய பாவா லட்சுமணனுக்கு ஓடி வந்து உதவிய லெஜண்ட் சரவணன்!

தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…

3 மாதங்கள் ago

ஓடிடியில் ‘தி லெஜண்ட்’ சரவணனின் அதிரடி வேட்டை: பிரைம் வீடியோவில் ‘லீடர்’ படம் புதிய சாதனை!

தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,

3 மாதங்கள் ago

நடிகர் வாகை சந்திரசேகருக்கு மத்திய அரசின் உயரிய “யுவ புரஸ்கார்” தேசிய விருது அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…

3 மாதங்கள் ago

ஒரு பக்கம் மனதை நெகிழ வைத்த இசை… மறுபக்கம் மாடர்ன் மியூசிக் மேஜிக் – சாம் CS அசத்தல்!

இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.

3 மாதங்கள் ago