பாகுபலி, சலார் , கல்கி 2898 ஏடி போன்ற மெகா ஹிட் படங்கள் மூலம் கொண்டாடப்படும், உலகின் சிறந்த நடிகர்களில் ஒருவராக போற்றப்படும் பான்-இந்திய ரெபெல் ஸ்டார் பிரபாஸ், இன்று தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் இன்டர்நேஷனல் ஷார்ட் ஃபிலிம் பெஸ்டிவலை ஒரு அற்புதமான அறிவிப்பு வீடியோ மூலம் அறிமுகப்படுத்தினார்.
தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் தளத்தின் கீழ் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, உலகம் முழுவதும் உள்ள படைப்பாளிகளுக்கு நேரடியாக தயாரிப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களை அடையும் வாய்ப்பையும், புகழ் பெரும் வாய்ப்பையும் வழங்கி, கனவுகளை சினிமா வாழ்க்கையாக மாற்றும் புதிய காலத்தை உருவாக்குகிறது.
இந்த புரட்சிகர தளத்தை தனிப்பட்ட முறையில் ஆதரித்த பிரபாஸ், திரைப்பட உருவாக்கத்தை ஜனநாயகப்படுத்தும் இதன் சக்தியை வலியுறுத்தி பேசியுள்ளார்.
“தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் என்பது ஒரு விழா மட்டும் அல்ல — இது கதைகள் வாழ்க்கையாக மாறும் இடம்,” என்று அவர் அந்த வீடியோவில் பகிர்ந்தார்.
மேலும் அவர் பகிர்ந்துகொண்டதாவது: ஒவ்வொரு குரலும் ஒரு ஆரம்ப வாய்ப்புக்கு தகுதியானது.ஒவ்வொரு கனவுக் கதைக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டியது அவசியம்.
உலகம் முழுவதிலிருந்தும் கதை சொல்லிகளை தங்கள் பயணத்தைத் தொடங்க அழைக்கிறது.
https://www.thescriptcraft.com/register/director @TSCWriters #Vaishnav @uppalapatipramod
பாரம்பரிய போட்டிகளிலிருந்து மாறுபட்டு, இந்த விழா உலகின் எந்த மூலையிலிருந்தும் கதை சொல்லிகளை ஆதரிக்கிறது. 2 நிமிடங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட குறும்படங்கள், எந்த ஜானரிலும், 90 நாட்கள் போட்டி காலத்தில் பங்கேற்கலாம். பார்வையாளர்களின் வாக்குகள், லைக்ஸ் மற்றும் ரேட்டிங்ஸ் அடிப்படையில் முதல் மூன்று வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதே சமயம், சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு படமும், புதிய திறமைகளை தேடி வரும் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் கவனத்தை பெறும்.
அந்த வீடியோவில் பிரபல இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா கூறியுள்ளதாவது :
“ஒரு திரைப்பட இயக்குநராக உருவாக குறும்படம் எடுப்பதே மிக முக்கியமான அம்சம். காகிதத்தில் நீங்கள் எழுதுவது மற்றும் திரையில் நீங்கள் உருவாக்குவது — இரண்டும் முற்றிலும் வேறு வேறு யதார்த்தங்கள். சாதிக்க ஆசைப்படும் இயக்குநர்களுக்கு இது சரியான நேரம். பதிவு செய்து இதை முழுமையாக பயன்படுத்துங்கள்.”
இயக்குநர் நாக் அஸ்வின் கூறியதாவது : “YouTube-ல் பார்த்த ஒரு குறும்படம் மூலமாகத்தான் நான் அனுதீப்பை கண்டுபிடித்தேன். அதிலிருந்தே ‘ஜதி ரத்னாலு’ படம் உருவானது. ஒரு திரைப்பட பள்ளியை விட, உங்கள் வேலை மற்றும் அதைப் பற்றிய உங்கள் புரிதலே மிகவும் முக்கியம். இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி, உங்கள் படங்களை சமர்ப்பித்து, சிறந்ததை சாதிக்க வேண்டும்.”
இயக்குநர் ஹனு ராகவபுடி மேலும் கூறியதாவது: “பல இளைஞர்களுக்கு திரைப்படத் துறையில் நுழைந்து இயக்குநராக வேண்டும் என்ற ஆசை உள்ளது. உங்கள் பார்வையை வெளிப்படுத்துங்கள், உங்கள் கனவுகளை வெல்லுங்கள். வாழ்த்துகள்.”
ஒரு பிரத்யேக கூட்டணியாக, புதிய இயக்குநர்களுக்கான கூட்டாளியாக க்விக் டிவி இதில் இணைகிறது. க்விக் டிவியின் ஜூரி 15 சிறந்த திரைப்படக் கலைஞர்களைத் தேர்ந்தெடுக்கும். அவர்கள் ஒவ்வொருவருக்கும் முழுமையாக நிதியளிக்கப்படும் 90 நிமிட திரைப்பட ஸ்கிரிப்ட், முழு தயாரிப்பு ஆதரவு மற்றும் க்விக் டிவி தளத்தில் உலகளாவிய பிரீமியர் வழங்கப்படும். இதன் மூலம் 15 படைப்பாளிகள் குறும்படங்களில் இருந்து நேரடியாக தொழில்முறை திரைப்பட இயக்குநர்களாக, சர்வதேச அளவில் அறிமுகமாகும் வாய்ப்பைப் பெறுகிறார்கள்.
தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் இணையதளத்தில் தற்போது பதிவுகள் திறக்கப்பட்டுள்ளன. சரியான சமர்ப்பிப்பு தேதிகள் மற்றும் பிரிவுகள் விரைவில் அறிவிக்கப்படும்.
தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: “அடுத்த பார்வையாளர்களை கவரும் இயக்குநர் எங்கிருந்தும் வரலாம் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த தளம் ஒவ்வொரு கதை சொல்லிக்கும் ஒரு குரல், ஒரு மேடை மற்றும் உலகளாவிய பார்வையாளர்கள் மற்றும் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களால் காணப்படும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.”
பிரபாஸ் அவர்களின் துணிச்சலான கனவுத் திட்டமான தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட், தால்லா வைஷ்ணவ் மற்றும் பிரமோத் உப்பலபாட்டி ஆகியோரால் நிறுவப்பட்டது. புதிய திறமைகளை வளர்த்து, எழுத்தாளர்கள், கதை சொல்லிகள் மற்றும் இயக்குநர்கள் தங்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்த ஒரு வலுவான மேடையை வழங்கும் நோக்கில் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
திரைப்படங்களை பொறுத்தவரையில், பிரபாஸ் நடிப்பில் தி ராஜாசாப், ஃபௌஸி, ஸ்பிரிட், கல்கி 2898 ஏடி பாகம் 2, சலார் பாகம் 2. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமாக உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 9, 2026 அன்று உலகளவில் திரைக்கு வர…
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமாக உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 9, 2026…
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித் குமார், 'குட் பேட் அக்லி' திரைப்படத்திற்குப் பிறகு திரைத்துறையில் இருந்து சிறிது இடைவெளி…
காசோலை மோசடி வழக்கில் தனக்கு எதிராக வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பு குறித்தும், சமூக வலைதளங்களில் பரவி வரும் கைது வாரண்ட்…
மலையாள சினிமாவில் சுமார் 225-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, பல வெற்றிப் படங்களை இயக்கியும், எழுதியும் சாதனை படைத்த ஸ்ரீனிவாசன்,
திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு கூட்டணி, தனது முதல் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.