பிக் பாஸ் தமிழ் 9: “வழக்காடு மன்றம்” டாஸ்க் தீவிரம்! பார்வதி – அரோரா மோதல் உச்சத்தில்!
December 11, 2025 Published by anbuselvid8bbe9c60f

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 இப்போது 66 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் பிரஜின் எவிக்ட் ஆன நிலையில், தற்போது அமித் வீட்டுத் தலைவராக இருக்கிறார்.
வீட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் ‘வழக்காடு மன்றம்’ டாஸ்க் முழு வீட்டையும் இரண்டாக பிளந்து விட்டது!
- நேற்று முன்தினம் (டிச.9) வினோத் → ஆதிரை மீது வழக்கு தொடர்ந்து வெற்றி
- உடனே ஆதிரை → FJ மீது மீண்டும் வழக்கு தொடர்ந்து வெற்றி
- அதன் பிறகு பார்வதி → FJ மீது வழக்கு தொடர்ந்து வெற்றி
இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோ தீயாக பரவி வருகிறது. அதில் அரோரா நேரடியாக பார்வதி மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அரோராவுக்கு ஆதரவாக வாதாடிய விக்ரம் (Vikkals Vikram) பார்வதியை நோக்கி கொதித்தெழுந்து பேசியது புரோமோவின் ஹைலைட்!
விக்ரம் பேசியது: “பாரு… அரோரா மேல அவதூறு பரப்புறாங்க. அரோராவை எப்படியாவது வெளியே அனுப்பணும்’னு கங்கணம் கட்டிட்டு இருக்காங்க. அரோராவைப் பார்த்து பயம்’னு ஒத்துக்கோங்க பாரு! உங்க முகத்திரை எல்லாம் கிழிஞ்சு போச்சு. நீங்க யாருன்னு இப்போ எல்லாருக்கும் நல்லா தெரிஞ்சு போச்சு!”

விக்ரமின் இந்த கடுமையான வார்த்தைகளுக்குப் பிறகு பார்வதி அதிர்ச்சியுடனும் ஆத்திரத்துடனும் பதிலளிக்கும் காட்சிகளும் புரமோவில் இடம்பெற்றுள்ளன.
இந்த ஒரு டாஸ்க்கே வீட்டை முழுக்க முழுக்க பிளவுபடுத்தி விட்ட நிலையில், இந்த வார எவிக்ஷன் யாருக்கு ஆபத்து என ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.





















