Download App

பிக் பாஸ் தமிழ் சீசன் 9: விக்ரம் கடும் சாடல்! திவ்யா ‘ஃபிராட்’ என விமர்சனம் – நாமினேஷன் புரொமோ வைரல்!

மார்கழி 29, 2025 Published by anbuselvid8bbe9c60f

bb1

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி 84 நாட்களைக் கடந்து உச்சக்கட்ட பரபரப்பில் சென்று கொண்டிருக்கிறது. கடந்த வார இறுதியில் நடந்த டபுள் எலிமினேஷனில் அமித் பார்கவ் மற்றும் கனி திரு ஆகியோர் வெளியேறிய நிலையில், இந்த வார நாமினேஷன் புரொமோக்கள் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இன்று வெளியான முதல் புரொமோவில், விக்கல்ஸ் விக்ரம் திவ்யா கணேஷை நாமினேட் செய்து கடுமையாக விமர்சித்துள்ளார். “நியாயத்துக்காக குரல் கொடுக்கிறேன்னு சொல்லி வெறும் சுயநலமா பேசுற மிகப்பெரிய ஃபிராட் (Fraud). மாற்றுக் கருத்துக்களை எதிர்கொள்ள முடியாத ஒரு கோழை. உங்க மேல வைக்கிற மாற்றுக் கருத்துக்களை ஏத்துக்காம இத்தனை வாரம் வந்ததுலாம் அயோக்கியத்தனம். நான்தான் இங்க நியாயம் கேட்கிறேன்னு சொல்லி ஒரு பொய்யான வேடமும், பொய்யான முகமூடியும் போட்டுகொள்கிற ஒரு ஃபிராட்” என விக்ரம் திவ்யாவை சாடியுள்ளார். இந்த கடும் வார்த்தைகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

bb

தொடர்ந்து வெளியான இரண்டாவது புரொமோவில், வினோத், அரோரா (Aurora Sinclair), சுபிக்ஷா, கம்ருதீன், சபரிநாதன் ஆகியோர் நாமினேட் செய்யப்படுகின்றனர். குறிப்பாக, பார்வதி (VJ Parvathy) கம்ருதீனை நாமினேட் செய்து, “நான் அந்த ஃபீலிங்ல விளையாடப்பட்டுடேனோ அப்படின்னு எனக்குத் தோணுது” என காரணம் கூறியுள்ளார். இது வீட்டுக்குள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் தற்போது போட்டி உச்சத்தில் உள்ள நிலையில், இந்த நாமினேஷன்கள் யாரை எலிமினேஷன் ஜோனுக்கு கொண்டு செல்லும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி ஸ்டார் விஜய் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.

Trending Now