பிக் பாஸ் தமிழ் சீசன் 9: வியானாவின் கோபம் தீயாய் எரியுது! சாண்ட்ராவை கடுமையாக சாடிய புரோமோ
தை 6, 2026 Published by anbuselvid8bbe9c60f

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 இறுதிக் கட்டத்தை நோக்கி வேகமெடுத்து சென்றுகொண்டிருக்கிறது. கடந்த வாரம் வீட்டில் 9 போட்டியாளர்கள் இருந்த நிலையில், தற்போது வெறும் 6 பேர் மட்டுமே மீதமிருக்கின்றனர்.
வி.ஜே.பார்வதி மற்றும் கம்ருதீன் ஆகியோர் வன்முறை சம்பவம் காரணமாக ரெட் கார்டு பெற்று வெளியேற்றப்பட்டனர். அதைத் தொடர்ந்து, சுபிக்ஷா கடந்த வார எவிக்ஷனில் குறைவான வாக்குகள் பெற்று வெளியேறினார்.
இந்த வாரம் ‘பணப்பெட்டி 2.0’ டாஸ்க் தொடங்கியுள்ளது. இதில் போட்டியாளர்கள் பல சுவாரஸ்யமான சவால்களை எதிர்கொண்டு பணத்தை சேகரிக்க வேண்டும்.
நேற்று வியானா பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். இன்று திவாகர், பிரவீன் காந்தி, பிரவீன் ராஜ் ஆகியோர் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளனர். இவர்கள் வீட்டின் டைனமிக்ஸை மாற்றியமைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வெளியான புதிய புரோமோவில் வியானா, சாண்ட்ராவை நேரடியாக தாக்கி பேசியுள்ளார். “வேலை செய்ய அவங்களுக்கு வலிக்குது. உடம்பு முழுசும் ஈவில்னஸ் இருக்கு. என்னைய நாமினேட் பண்ணி வெளியே அனுப்பிச்சிட்டு, உன்னை நினைச்சேன்னு பொய் சொல்றாங்க. நல்லா சீரியல் நடிச்சு நடிச்சு… டிராமா பண்ணி எல்லாரையும் அனுப்பிச்சு விடுறாங்க” என்று வியானா கோபமாக சாடியுள்ளார்.
இந்த புரோமோ ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வியானாவின் ரீ-என்ட்ரி வீட்டில் புதிய சண்டைகளை தூண்டும் என தெரிகிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 விஜய் டிவியில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இறுதி வாரங்கள் மேலும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது!






















