தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் குமார், தனது பிஸியான படப்பிடிப்பு மற்றும் கார் பந்தயங்களுக்கு இடையே, ஆன்மீகப் பயணமாகத் தனது குடும்பத்துடன் கேரளா சென்றுள்ளார். கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள பெருவெம்பா ஸ்ரீ ஊட்டுகுளங்கரா பகவதி கோயிலில் அவர் இன்று சாமி தரிசனம் செய்தார்.
நடிகர் அஜித் குமாருடன் அவரது மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக் ஆகியோரும் இந்த ஆன்மீகப் பயணத்தில் கலந்து கொண்டனர். கேரளாவின் பாரம்பரிய முறைப்படி, அஜித் குமார் மேலாடை இன்றி, வேட்டி அணிந்து மிகவும் எளிமையான தோற்றத்தில் தரிசனம் செய்தார். அஜித்தின் தந்தை பாலக்காட்டைச் சேர்ந்தவர் என்பதால், இந்தப் பகவதி அம்மன் கோயில் அஜித்தின் குலதெய்வம் கோயிலாகக் கருதப்படுகிறது.
அஜித் கோயிலுக்கு வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் அங்கு பெருமளவில் கூடினர். கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்து முடித்த பிறகு, வெளியே வந்த அஜித்தை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டனர். எப்போதும் ரசிகர்களிடம் அன்பாகப் பழகும் அஜித், எவ்விதத் தயக்கமும் இன்றி புன்னகையுடன் அவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ‘ட்ரெண்டிங்’ ஆகி வருகின்றன
இயக்குநர் கீது மோகன்தாஸ் நயன்தாரா குறித்து கூறுகையில், “நயன்தாராவை ஒரு சிறந்த நட்சத்திரமாகவும், வலிமையான திரைபட முன்னணி ஆளுமையாகவும் அனைவரும்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியைச் சேர்ந்த லட்சுமி அம்மாள் (வயது 75) வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று…
தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்ட ஜனநாயகன் படத்தின் மீது ரசிகர்கள் அளப்பரிய எதிர்பார்ப்பு கொண்டுள்ளனர்.
இன்று வெளியான மூன்றாவது புரொமோவில், திவ்யா கணேஷ் மற்றும் விக்கல்ஸ் விக்ரம் (Vikkals Vikram) இடையே டாஸ்க் காரணமாக கடும்…
ஃபைனலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சூழலில் இன்று…
தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் 'பராசக்தி'.