விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நிகழ்ச்சி தொடங்கி 86 நாட்களைக் கடந்த நிலையில், கடந்த வார இறுதியில் நடந்த எவிக்ஷனில் அமித் பார்கவ் மற்றும் கனி திரு ஆகியோர் வெளியேறினர். இதனால் தற்போது பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 9 போட்டியாளர்கள் மட்டுமே மீதமுள்ளனர்.
ஃபைனலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சூழலில் இன்று வெளியான இரண்டாவது புரொமோவில், வீ ஜே பார்வதி சாண்ட்ரா ஆமியிடம் அரோரா சின்க்ளேர் (Aurora Sinclair) குறித்து கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
பார்வதி கூறியதாவது: “எனக்கு அரோரா இன்னொரு கனி மாதிரிதான் தெரியுது. பேசுறதுல ஒரு இனிமை இருக்கும். பண்ற விஷயங்கள்ல ஒரு இன்டலிஜென்ஸ் இருந்தாலும் அதுக்குப் பின்னாடி ஒரு கடுமையான வில்லத்தனம் இருக்கும். நம்மள மெண்டலி அட்டாக் பண்ணாங்கன்னா அதை மீறி வரதுக்கு டைம் எடுக்கும். நியாயமான காரணங்களை முன் வச்சு நேருக்கு நேர் போட்டி போடலாம். ஆனா பின்னாடி ஒரு விஷயத்தைப் பண்ணக்கூடாது. ராஜ வேலைகள் எல்லாத்தையும் பார்க்கிற ஒரு குட்டி கனிதான்.”
இந்த கருத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அரோராவின் விளையாட்டு முறை குறித்து ஏற்கனவே வீட்டுக்குள் பல சர்ச்சைகள் எழுந்த நிலையில், பார்வதியின் இந்த வார்த்தைகள் போட்டியை மேலும் சூடேற்றியுள்ளன.
தற்போது வீட்டில் உள்ள 9 போட்டியாளர்கள்: அரோரா, வீ ஜே பார்வதி, சாண்ட்ரா, கானா வினோத், திவ்யா கணேஷ், சுபிக்ஷா குமார், விக்கல்ஸ் விக்ரம், சபரிநாதன், கம்ருதீன் உள்ளிட்டோர்.
பிக் பாஸ் சீசன் 9 இறுதிப்போட்டி நெருங்கிவரும் நிலையில், அடுத்தடுத்த டாஸ்க்குகளும் எவிக்ஷன்களும் எப்படி திருப்புமுனைகளை ஏற்படுத்தும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். நிகழ்ச்சி ஸ்டார் விஜய் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டாரில் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது.
இயக்குநர் கீது மோகன்தாஸ் நயன்தாரா குறித்து கூறுகையில், “நயன்தாராவை ஒரு சிறந்த நட்சத்திரமாகவும், வலிமையான திரைபட முன்னணி ஆளுமையாகவும் அனைவரும்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியைச் சேர்ந்த லட்சுமி அம்மாள் (வயது 75) வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று…
தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்ட ஜனநாயகன் படத்தின் மீது ரசிகர்கள் அளப்பரிய எதிர்பார்ப்பு கொண்டுள்ளனர்.
இன்று வெளியான மூன்றாவது புரொமோவில், திவ்யா கணேஷ் மற்றும் விக்கல்ஸ் விக்ரம் (Vikkals Vikram) இடையே டாஸ்க் காரணமாக கடும்…
தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் 'பராசக்தி'.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் குமார், தனது பிஸியான படப்பிடிப்பு மற்றும் கார் பந்தயங்களுக்கு இடையே, ஆன்மீகப்…