Download App

நடிகர் ராஜசேகருக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து: காலில் பலத்த எலும்பு முறிவு – 2 மணி நேர அறுவை சிகிச்சை!

December 9, 2025 Published by anbuselvid8bbe9c60f

rajasekar

சீனியர் நடிகர் டாக்டர் ராஜசேகர் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த சம்பவம் திரைத்துறையிலும் ரசிகர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வானந்த் நடிப்பில் உருவாகி வரும் “பைக்கர்” படத்தின் படப்பிடிப்பின் போது இந்த விபத்து நடந்துள்ளது. காட்சியொன்றில் திடீர் விபத்தால் நடிகர் ராஜசேகரின் காலில் பல எலும்புகள் முறிந்துள்ளன.

உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சுமார் 2 மணி நேரம் நீண்ட அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் ஐ.சி.யூ-வில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்கள் அளித்த தகவலின்படி, முழுமையான குணமடைய இன்னும் பல வாரங்கள் தேவைப்படும் என்பதால், அடுத்த சில வாரங்களுக்கு அவர் படப்பிடிப்பில் பங்கேற்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜசேகர் தற்போது “பைக்கர்” படத்துடன், விஜய் தேவரகொண்டா – கீர்த்தி சுரேஷ் நடிக்கும் பான்-இந்தியா படத்திலும் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த இரு படங்களின் படப்பிடிப்பு திட்டமும் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சர்வானந்த், இயக்குநர் சந்தோஷ் ஆகியோர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர். மனைவி ஜீவிதா ராஜசேகர் மற்றும் மகள்கள் ஷிவானி, ஷிவாத்மிகா ஆகியோரும் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து வருகின்றனர்.

ரசிகர்கள் அனைவரும் #GetWellSoonRajasekhar என்ற ஹேஷ்டேக்கில் வாழ்த்து செய்திகளை பதிவு செய்து வருகின்றனர்.

விரைவில் முழு உடல் நலத்துடன் திரும்பி வர வேண்டும் என்று நடிகர் ராஜசேகருக்கு தமிழ் & தெலுங்கு திரையுலகமே பிரார்த்தனை செய்கிறது!