‘டிமான்டி காலனி 3’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
தை 3, 2026 Published by anbuselvid8bbe9c60f

திகில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த ‘டிமான்டி காலனி’ தொடரின் மூன்றாம் பாகமான ‘டிமான்டி காலனி 3’ (Demonte Colony 3 – The End Is Too Far) படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குநர் அஜய் ஞானமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட இந்த போஸ்டரில், நாயகி பிரியா பவானி சங்கர் பேய் போன்ற தோற்றத்தில் திகிலூட்டும் வகையில் காட்சியளிக்கிறார்.
போஸ்டரில் கர்ப்பிணியாக தெரியும் பிரியா பவானி சங்கர், வயிறு மற்றும் கைகளில் ரத்தக்கறை பூசியபடி சினிஸ்டர் சிரிப்புடன் நிற்பது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “When darkness comes to rule, evil takes over” என்ற கேப்ஷனுடன் வெளியான இந்த போஸ்டர், படத்தின் திகில் அளவை இன்னும் உயர்த்தியுள்ளது.
2015-ல் வெளியான முதல் பாகம் பெரும் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து 2024-ல் வெளியான ‘டிமான்டி காலனி 2’ ரூ.80 கோடி வரை வசூலித்து வெற்றிப்படமான நிலையில், மூன்றாம் பாகத்தின் அறிவிப்பு புத்தாண்டன்று வெளியானது. அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நாயக நாயகியாக நடிக்கும் இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இசை: சாம் சி.எஸ்., ஒளிப்பதிவு: சிவகுமார் விஜயன், படத்தொகுப்பு: குமரேஷ். படம் 2026 கோடையில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த செகண்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.



















