Download App

ரஜினிகாந்த் வெளியிட்ட ‘ROOT’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் – பெரும் எதிர்பார்ப்பு!

தை 3, 2026 Published by anbuselvid8bbe9c60f

root

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், புத்தாண்டு தினமான ஜனவரி 1 அன்று, கெளதம் ராம் கார்த்திக் நாயகனாக நடித்துள்ள ‘ROOT – Running Out Of Time’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரஜினி, படக்குழுவினரைப் பாராட்டியதோடு, படம் பெரும் வெற்றி பெற வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

வெர்சஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் சூரியபிரதாப் இயக்கியுள்ளார். குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், சூரியபிரதாப் ‘கோச்சடையான்’ படத்தில் இணை இயக்குநராக பணிபுரிந்தவர்.

அறிவியல் கலந்த க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள ‘ROOT’ படத்தில் கெளதம் ராம் கார்த்திக்குடன் அபார்ஷக்தி குரானா (தமிழ் அறிமுகம்), பாவ்யா திரிகா, ஒய்.ஜி. மகேந்திரன், பாவ்னி ரெட்டி, லிங்கா, ஆர்.ஜே ஆனந்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

root1

படப்பிடிப்பு சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. ஒளிப்பதிவு: அர்ஜுன் ராஜா, இசை: அரன் ரே.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

More News

Trending Now