த்ரிஷ்யம் 3: ஜார்ஜ்குட்டியின் அடுத்த கட்டம்
தை 14, 2026 Published by Natarajan Karuppiah

மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் இயக்குனர் ஜீத்து ஜோசப் கூட்டணியில் உருவான ‘த்ரிஷ்யம்’ படத்தின் மூன்றாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 2, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு க்ரைம் த்ரில்லர் சீரிஸ் ‘த்ரிஷ்யம்’. இதன் முதல் இரண்டு பாகங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், தற்போது மூன்றாவது பாகம் தயாராகியுள்ளது. இயக்குநர்: ஜீத்து ஜோசப் முக்கிய நடிகர்கள்: மோகன்லால், மீனா, அன்சிபா ஹாசன், எஸ்தர் அனில். தயாரிப்பு: ஆசீர்வாத் சினிமாஸ் (ஆண்டனி பெரும்பாவூர்)
வெளியீட்டு தேதி: ஏப்ரல் 2, 2026
மலையாள பதிப்பு ஏப்ரல் மாதமே வெளியாவதால், ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். வழக்கமாக மலையாளத்தில் வெளியாகி சில மாதங்களுக்குப் பிறகே மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்படும். அஜய் தேவ்கன் நடிக்கும் ‘த்ரிஷ்யம் 3’ இந்தி பதிப்பு அக்டோபர் 2, 2026 அன்று வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.அண்மையில் ஒரு பேட்டியில் பேசிய ஜீத்து ஜோசப், “த்ரிஷ்யம் 3 படத்தைப் பார்க்க வரும்போது அதிக எதிர்பார்ப்பு (Expectations) இல்லாமல் வாருங்கள். அப்போதுதான் படத்தின் திருப்பங்களை முழுமையாக ரசிக்க முடியும்” என்று ரசிகர்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இரண்டாம் பாகம் முடிந்த இடத்திலிருந்து சுமார் 4-5 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பாகம் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜார்ஜ்குட்டி மற்றும் அவரது குடும்பம் இந்த முறை சட்டத்திடமிருந்து எப்படித் தப்பிக்கப் போகிறது? அல்லது போலீஸ் ஜார்ஜ்குட்டியைக் கையும் களவுமாகப் பிடிக்குமா? என்ற எதிர்பார்ப்பு கோலிவுட் முதல் பாலிவுட் வரை அனைவரிடமும் எழுந்துள்ளது.


















