Download App

டெல்லியில் பிரதமர் மோடியுடன் பொங்கல் கொண்டாட்டம்: ‘பராசக்தி’ குழுவினர் கலந்துகொண்டு சிறப்பு!

தை 14, 2026 Published by anbuselvid8bbe9c60f

gv

டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் இன்று (ஜனவரி 14, 2026) பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.

பிரதமர் மோடி தனது உரையில், “பொங்கல் திருவிழா விவசாயிகளின் உழைப்பை கொண்டாடுவதோடு, பூமி மற்றும் சூரியனுக்கு நன்றி செலுத்தும் பண்டிகை. இது இயற்கையுடன் இணைந்து வாழ்வதை நினைவூட்டுகிறது. தமிழ் கலாச்சாரம் உலக அளவில் கொண்டாடப்படும் உலகளாவிய திருவிழாவாக மாறியுள்ளது. ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற நோக்கத்தை இது வலுப்படுத்துகிறது” என்று கூறினார். அவர் பாரம்பரியமாக பசுக்களுக்கு உணவளித்து, பொங்கல் சமைத்து விழாவை தொடங்கி வைத்தார்.

gv1

விழாவில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தமிழக தலைவர்கள், பல மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள், சினிமா பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். குறிப்பாக, சமீபத்தில் வெளியான ‘பராசக்தி’ படத்தின் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் உள்ளிட்ட படக்குழுவினர் சிறப்பாக பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் ஜி.வி. பிரகாஷ் தனது இசையில் திருவாசகம் பாடலை அரங்கேற்றினார். இது பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னர் அவர் X-இல் பதிவிட்டுள்ளார்: “மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாண்புமிகு மத்திய அமைச்சர் எல். முருகன் முன்னிலையில் பொங்கல் விழாவில் திருவாசகத்தை அரங்கேற்றம் செய்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மேலும், இது விரைவில் வெளியாகும்.”

gv2

விழாவுக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சிவகார்த்திகேயன் பேசியதாவது: “அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். இந்தப் பண்டிகை எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தரட்டும். ‘பராசக்தி’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. நம்முடைய கலாச்சாரத்தை டெல்லியில் கொண்டாடுவது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. பிரதமர் மோடியை முதல் முறை நேரில் சந்தித்தேன். அது மறக்க முடியாத தருணம். ‘ஜனநாயகன்’ எப்போது வெளியானாலும் கொண்டாட்டம் தான்!”

இந்த விழா தமிழ் கலாச்சாரத்தை தேசிய அளவில் கொண்டாடும் வகையில் அமைந்திருந்தது. பலரும் இதை தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தமிழ் சமூகத்துடனான தொடர்பை வலுப்படுத்தும் நிகழ்வாக பார்க்கின்றனர்.

More News

Trending Now