முதல்வரை சந்தித்த JioStar Leadership குழுவினர் !

JioStar Head Entertainment Business, South Cluster, திரு.கிருஷ்ணன் குட்டி, JioStar Executive Vice President – Tamil திரு. பாலச்சந்திரன் R, Turmeric Media – CEO திரு. R. மகேந்திரன் ஆகியோர், இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து, வரவிருக்கும் JioHotstar South Unbound என்ற முக்கிய நிகழ்வைப் பற்றி விளக்கினர்.

இந்த சந்திப்பில், நிகழ்வின் நோக்கம், தென்னிந்திய கலாசாரத்தை முன்னிறுத்தும் வகையில் அது உருவாக்கும் தாக்கம் போன்ற பல அம்சங்கள் குறித்து குழுவினர் முதல்வரிடம் பகிர்ந்தனர். மேலும், ‘Letter of Engagement’ என்ற ஒப்பந்தத்தின் முக்கிய குறிப்புகளும் வழங்கப்பட்டு, தமிழ்நாட்டின் திரைப்பட மற்றும் ஊடகக் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து திறமைகளை உருவாக்குவது, பயிற்சி வாய்ப்புகளை அதிகரிப்பது, படைப்புத் துறையை வலுப்படுத்துவது போன்ற முயற்சிகளில் JioStar வழங்கும் ஆதரவை குழுவினர் உறுதிப்படுத்தினர்.

டிசம்பர் 9, 2025 அன்று சென்னை நகரில் நடைபெறும் JioHotstar South Unbound நிகழ்வு, தென்னிந்திய சினிமா மற்றும் படைப்புத் திறனைக் கொண்டாடும் முக்கிய விழாவாகும். தென்னிந்தியாவின் முன்னணி இயக்குநர்கள், படைப்பாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள திறமைகள் இந்நிகழ்வில் பங்கேற்கிறார்கள். JioHotstar இன், புதிய தென் மாநில படைப்புகள், கதைகள், இந்த நிகழ்வில் வெளியிடப்படும்.

இந்த விழாவை தமிழக துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கிறார். பாராட்டுப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் பத்மபூஷண் திரு. கமல்ஹாசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.

தென்னிந்திய நடிகர்கள், இயக்குநர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பல்வேறு துறைகளின் முன்னணி படைப்பாளர்கள் பங்கேற்கும் இந்த விழா, தென்னிந்திய கலை மற்றும் கதைக்கூறும் மரபின் தாக்கத்தை உலகுக்கு முன்னிறுத்தும் முக்கிய தருணமாக இருக்கும். மேலும், தென்னிந்திய பொழுதுபோக்கு உலகை உயர்த்த, வளர்க்க, பலப்படுத்த JioStar மேற்கொள்ளும் தொடர்ந்த பங்களிப்பையும் இது மீண்டும் வலியுறுத்துகிறது.

Natarajan Karuppiah

Share
Published by
Natarajan Karuppiah
Tags: MKStalin

Recent Posts

ஜேசன் சஞ்சய் இயக்கும் ‘சிக்மா’: படப்பிடிப்பு நிறைவு – டீசர் தேதியை அறிவித்தது படக்குழு!

திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு கூட்டணி, தனது முதல் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.

15 hours ago

ஜெயிலர் 2-ல் நோரா பதேஹி சிறப்பு குத்துப் பாடல்: ‘காவாலா’வை மிஞ்சுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வேகமாக உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் முக்கிய…

16 hours ago

சண்முக பாண்டியன் – மித்ரன் ஜவஹர் கூட்டணி: ‘கொம்புசீவி’க்கு பிறகு புதிய படம் உறுதி!

நடிகர் விஜயகாந்தின் இளைய மகனும், நடிகருமான சண்முக பாண்டியன் நடிப்பில், பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொம்புசீவி' திரைப்படம் இன்று (டிசம்பர்…

17 hours ago

எம்.எஸ்.சுப்புலட்சுமி பயோபிக்: சாய் பல்லவி நடிக்கவுள்ளாரா? பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்!

உலகப் புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞரும், இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா பெற்ற முதல் இசைக் கலைஞருமான எம்.எஸ்.சுப்புலட்சுமியின்…

17 hours ago

ஜனநாயகன் படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘ஒரு பேரே வரலாறு’ லிரிக்கல் வீடியோ வெளியீடு: ரசிகர்கள் கொண்டாட்டம்!

தளபதி விஜய் நடிப்பில், கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’…

17 hours ago

சூர்யாவின் ‘ஹாட்ரிக்’ கொண்டாட்டம்: 2026-ல் வரிசைகட்டும் மெகா திரைப்படங்கள்!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது அடுத்தடுத்து பிரம்மாண்டமான திட்டங்களில் பிஸியாக உள்ளார்.

21 hours ago