சிவகார்த்திகேயனின் 25-வது படமான ‘பராசக்தி’ திரைப்படத்தின் ரிலீஸ் கவுண்டவுன் அதிகாரப்பூர்வமாக தொடங்கிவிட்டது! சுதா கொங்கரா இயக்கத்தில், ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் ரூ.150 கோடி பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.
சிவகார்த்திகேயனுடன் அதர்வா, ரவி மோகன், பசில் ஜோசஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும், நாயகியாக பிரபல கன்னட நடிகை ஸ்ரீலீலா அறிமுகமாகிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது போஸ்ட்-புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
வரும் 2026 பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 14-ம் தேதி தளபதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துடன் நேரடியாக மோதும் வகையில் ‘பராசக்தி’ திரைக்கு வரவுள்ளது.
ஏற்கனவே வெளியான ப்ரோமோ மற்றும் முதல் பாடலான ‘அடி அலையே’ ரசிகர்களிடம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில், இன்று மாலை 5.30 மணிக்கு இரண்டாவது பாடலான ‘ரத்னமாலா’ வெளியாகி அபார வரவேற்பைப் பெற்றது.
இதைத் தொடர்ந்து, படக்குழு இன்று புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. “இன்னும் 50 நாட்களே!” எனக் குறிப்பிடும் வகையில் வெளியிடப்பட்ட இந்த கவுண்டவுன் போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களின் அதிரடி லுக்கில் வடிவமைக்கப்பட்ட இந்தப் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பொங்கல் 2026-இல் ‘ஜனநாயகன் vs பராசக்தி’ என்ற பிரம்மாண்ட மோதல் உறுதியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் இரு படங்களுக்கும் இணையில் கொண்டாட்டத்தைத் தொடங்கிவிட்டனர்!
திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு கூட்டணி, தனது முதல் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வேகமாக உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் முக்கிய…
நடிகர் விஜயகாந்தின் இளைய மகனும், நடிகருமான சண்முக பாண்டியன் நடிப்பில், பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொம்புசீவி' திரைப்படம் இன்று (டிசம்பர்…
உலகப் புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞரும், இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா பெற்ற முதல் இசைக் கலைஞருமான எம்.எஸ்.சுப்புலட்சுமியின்…
தளபதி விஜய் நடிப்பில், கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’…
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது அடுத்தடுத்து பிரம்மாண்டமான திட்டங்களில் பிஸியாக உள்ளார்.