Download App

கௌதம் கார்த்திக் புதிய படம் பூஜையுடன் துவக்கம்!

மார்கழி 1, 2025 Published by Natarajan Karuppiah

நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றது. இப்படத்தை “டாடா” படத்திற்கு பெயர் போன இயக்குநர் கணேஷ் கே பாபு தயாரிக்கிறார். இது அவரது முதல் தயாரிப்பு திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.

படத்தை இயக்குகிறார் இயக்குநர் ராஜூ முருகனின் உதவி இயக்குநராக பணியாற்றிய தினா எம் ராகவன். இவர் தனது முதல் இயக்குநர் படைப்பாக இத்திரைப்படத்தை உருவாக்கவுள்ளார்.கௌதம் கார்த்திக்குடன் ஹீரோயினாக அஞ்சனா நீத்ரு நடிக்க, மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகரும் இயக்குநருமான செல்வராகவன் நடிக்கவுள்ளார். இந்த கூட்டணி ஏற்கனவே ரசிகர்களிடம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் மற்ற விவரங்கள் மற்றும் தலைப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கௌதம் கார்த்திக் ரசிகர்களுக்கு இது ஒரு புத்தம் புதிய ஆனந்த சர்ப்ரைஸாக அமையும்!

More News

Trending Now