ராஷ்மிகா மந்தனா, தனது சமீபத்திய தெலுங்கு படமான ‘தி கேர்ள் பிரண்ட்’ (ராகுல் ரவிந்திரன் இயக்கம்) வெற்றியில் மூழ்கி இருக்கும் நிலையில், கொரியன் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டியுள்ளார். கொரோனா காலத்தில் கொரியன் வெப் சீரிஸ்களைப் பார்க்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், ஒவ்வொரு சீரிஸும் 16 எபிசோட்கள் (16 மணி நேரம்) கொண்டதால் அவற்றின் மீது ஆழ்ந்த ஆர்வம் வந்ததாகவும் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறினார். “கொரியன் படத்தில் நடிப்பது சுவாரசியமாக இருக்கும், ஆனால் எனக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரம் என் தேர்வுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். நான் எப்போதும் செலக்டிவாக ரோல்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதை நீங்கள் அறிவீர்கள்” என ராஷ்மிகா தெரிவித்தார்.
இதேபோல் அவர் நடித்த ‘தம்மா’ (அயுஷ்மான் குரானா, நவாஸுதீன் சித்திக் நடிப்பு) படமும் வெற்றி பெற்றுள்ளது. அடுத்து ‘காக்டெயில் 2’, ‘மிசா’ போன்ற படங்களில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஷ்மிகாவின் இந்த ஆர்வம், அவரது பன்மொழி சினிமா பயணத்தை மேலும் விரிவடையச் செய்யும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…
சென்னையின் பல்லாவரம் மண்ணில் தொடங்கிய இரு வெற்றிப் பயணங்கள்… இனி வளர்ச்சியை நோக்கி ஒரே பாதையில்! சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு…
தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…
தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,
தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…
இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.