Download App

‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு அப்டேட் !

December 5, 2025 Published by Natarajan Karuppiah

இளையதளபதி விஜய் மற்றும் இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ (Jananayagan) திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டுத் தேதி குறித்த எதிர்பார்ப்பு தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு, ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில், டிசம்பர் 31 ஆம் தேதி அல்லது ஜனவரி 1 ஆம் தேதி டிரெய்லரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி 9, 2026 அன்று படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் புத்தாண்டு டிரெய்லர் மூலம் ‘ஜனநாயகன்’ படம் குறித்த பிரம்மாண்டமான பார்வை ரசிகர்களுக்கு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சமீபத்தில் வெளியான சமீபத்தில் வெளியான தகவலின் படி ‘ஜன நாயகன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி டிசம்பர் மாதம் 27-ஆம் தேதி மலேசியாவில் நடைபெறும் என தகவல் . அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இந்த அதிரடி அரசியல் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களைத் திரையரங்குகளில் சந்திக்கும்.