வீர தீர சூரன் வெற்றிப் பயணத்துக்குப் பிறகு, சியான் விக்ரமின் அடுத்தடுத்த ப்ராஜெக்ட்களைச் சுற்றி ரசிகர்கள் மத்தியில் ஒரே குழப்பக் காடு தான்! இப்போது அதிகாரப்பூர்வமாக ஒரு கிளியர் அப்டேட் வந்திருக்கு – விக்ரமின் 63வது படம் உறுதியாகியிருக்கு! முதலில் ‘மண்டேலா’ புகழ் மடோன் அஸ்வின் இயக்கத்தில் விக்ரம் 63 ப்ராஜெக்ட் அறிவிக்கப்பட்டது. கொஞ்ச நாள் ஷூட்டிங் கூட நடந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் திடீரென ப்ராஜெக்ட் டிராப்! ரசிகர்கள் ஏமாற்றம். பிறகு வந்த செய்தி – பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கிறார், இது 64வது படம். கதை வொர்க் முடியாததால் தாமதம் என அறிவிப்பு. இப்போது 63வது இடம் காலியாக இருந்த நிலையில்…இதோ அதிரடி அறிவிப்பு!
விக்ரமின் 63வது படத்தை இயக்கப்போகும் இயக்குநர் – போடி கே ராஜ்குமார்! இவர் ஒரு அறிமுக இயக்குநர் என்றாலும், இதுவரை மூன்று குறும்படங்கள் இயக்கி கவனம் பெற்றவர். படத்தை தயாரிக்கும் நிறுவனம் – தமிழ் சினிமாவின் பாரம்பரிய பிராண்ட் சாந்தி டாக்கீஸ்! விக்ரமின் படங்கள் எப்போதும் எதிர்பார்ப்பை உருவாக்கும். இந்தப் புதிய கூட்டணி என்ன மேஜிக் காட்டப்போகுது? ரசிகர்களே, காத்திருப்போம்!
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான 'கூலி' (Coolie)…
'லவ் டுடே' வெற்றிக்குப் பிறகு தொடர்ச்சியாக ஹிட் கொடுத்து வரும் நடிகர்-இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான…
தளபதி விஜயின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்ட 'ஜனநாயகன்' படத்தின் மூன்றாவது சிங்கிள் 'செல்ல மகளே...' இன்று (டிசம்பர் 26) வெளியாகி…
தளபதி விஜயின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்ட 'ஜனநாயகன்' வரும் ஜனவரி 9, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது 81 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த வார…
மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் டிசம்பர் 22 மற்றும் 23, 2025 அன்று அதன் 19-வது…