சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தின் டப்பிங் பணிகள் துவக்கம்… 2026 பொங்கல் ரிலீஸ் உறுதி!
November 10, 2025 Published by anbuselvid8bbe9c60f

நடிகர் சிவகார்த்திகேயன் – இயக்குனர் சுதா கொங்கரா இணைந்து உருவாக்கி வரும் ‘பராசக்தி’ திரைப்படத்தின் டப்பிங் பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன. இப்படத்திற்கு நடிகர் ரவி மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், அவருக்கான டப்பிங் பணிகள் முதலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இப்படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் உருவாகி வரும் ‘பராசக்தி’ வரும் 2026 ஜனவரி 14ஆம் தேதி (பொங்கல்) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. திட்டமிட்டபடி படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதால், ரிலீஸ் தேதியில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிகிறது.

சிவகார்த்திகேயனின் அதிரடி ஆக்ஷன் அவதாரமாக உருவாகி வரும் இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டப்பிங் துவக்கத்துடன் படம் இறுதிக் கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது!























