Download App

ரஜினியின் அடுத்த படம்: ‘டிராகன்’ இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கம் உறுதி!

மார்கழி 30, 2025 Published by anbuselvid8bbe9c60f

rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தை முடித்த பிறகு அடுத்ததாக எந்த இயக்குநருடன் இணையப்போகிறார் என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதற்காக பல்வேறு முன்னணி இயக்குநர்களிடம் கதை கேட்டு வந்த ரஜினி, ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமாருடன் இணையவுள்ளதாக சில தகவல்கள் பரவின. ஆனால், தற்போது அந்த செய்தி மாறி, ‘டிராகன்’ படத்திற்கு புகழ் பெற்ற இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தான் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு 2026 ஜனவரி முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படப்பிடிப்பு 2026 ஏப்ரல் மாதத்தில் தொடங்கவுள்ளது. ரஜினியும் அஸ்வத் மாரிமுத்துவும் இதுவரை 5 முறை சந்தித்து கதை விவாதம் நடத்தியுள்ளனர். இறுதியாக நடந்த சந்திப்பில் அஸ்வத் கூறிய இறுதி திரைக்கதை ரஜினிக்கு மிகவும் பிடித்துப்போக, உடனடியாக ஒகே சொல்லியுள்ளார். இதனால் படத்தின் முன்னேற்பாடு பணிகள் பரபரப்பாக தொடங்கியுள்ளன.

ரஜினி ரசிகர்கள் மத்தியில் இந்தக் கூட்டணி பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Now