Download App

‘டாக்ஸிக்’ அப்டேட்: நயன்தாராவின் லுக் போஸ்டர் வெளியீடு – துப்பாக்கியுடன் பவர்ஃபுல் அவதார்!

மார்கழி 31, 2025 Published by anbuselvid8bbe9c60f

toxic

ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில், கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டாக்ஸிக்: அ ஃபேரிடேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ‘கே.ஜி.எஃப் சாப்டர் 2’ பிறகு யாஷ் நடிக்கும் படம் என்பதாலும், கே.வி.என். புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரிப்பதாலும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்படம் மார்ச் 19, 2026 அன்று கன்னடம், இங்கிலீஷ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகிறது.

இந்நிலையில், படக்குழு இன்று நயன்தாராவின் கதாபாத்திர லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. ‘கங்கா’ எனும் பெயரில் நயன்தாரா நடிக்கும் இந்த கதாபாத்திரம், இதுவரை அவர் ஏற்றதில்லாத ஒரு புதிய பரிமாணம் என்று படக்குழு தெரிவித்துள்ளது. போஸ்டரில், கருப்பு உடையில், தொடை உயர ஸ்லிட் கவுன் அணிந்து, துப்பாக்கியுடன் கேசினோ நுழைவாயிலில் நிற்கும் நயன்தாரா பவர்ஃபுல் மற்றும் ஆபத்தான தோற்றத்தில் காணப்படுகிறார். பின்னால் ஆட்கள் கதவுகளைத் திறந்து வழிவிடும் காட்சி, அவரது கதாபாத்திரத்தின் ஆதிக்கத்தை உணர்த்துகிறது.

இயக்குநர் கீது மோகன்தாஸ் நயன்தாரா குறித்து கூறுகையில், “நயன்தாராவை ஒரு சிறந்த நட்சத்திரமாகவும், வலிமையான திரைபட முன்னணி ஆளுமையாகவும் அனைவரும் அறிவோம். ஆனால் ‘டாக்ஸிக்’ படத்தில், இதுவரை நாம் காணாத ஒரு பரிமாணத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அவர் திரையில் நடிக்கவில்லை; அந்தக் கதாபாத்திரமாகவே மாறினார். அவரின் ஆழம், நேர்மை, உணர்ச்சி எல்லாமும் அந்த கதாப்பாத்திரத்தின் இயல்பாகவே இருந்தது. அதைவிட அழகானது, அந்த பயணத்தில் ஒரு நெருங்கிய நண்பரையும் நான் பெற்றேன்” என்றார்.

toxic

இதற்கு முன்பு கியாரா அத்வானி (நாடியா), ஹூமா குரேஷி (எலிசபெத்) ஆகியோரின் லுக் போஸ்டர்கள் வெளியாகி கவனம் பெற்றன. இப்படத்தில் ஒளிப்பதிவு: ராஜீவ் ரவி, இசை: ரவி பஸ்ரூர், எடிட்டிங்: உஜ்வல் குல்கர்னி, சண்டை இயக்கம்: ஜே.ஜே.பெர்ரி, அன்பறிவ், கெச்சா காம்பக்டி உள்ளிட்டோர் பணியாற்றியுள்ளனர்.

நயன்தாராவின் இந்த புது அவதார் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘டாக்ஸிக்’ படத்தின் அடுத்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்!

Trending Now