Download App

சென்னையில் தொடங்கியது ‘சூர்யா 47’ படப்பிடிப்பு !

December 8, 2025 Published by anbuselvid8bbe9c60f

suriya

நடிகர் சூர்யாவின் 47-வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ படப்பிடிப்பு இன்று (டிசம்பர் 8, 2025) சென்னையில் தொடங்கியது. ‘ஆவேஷம்’ படத்தின் மூலம் மலையாள சினிமாவில் பிரமாண்ட வெற்றி பெற்ற இயக்குநர் ஜீத்து மாதவன் தமிழில் அறிமுகமாகும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் சூர்யா ஒரு கம்பீரமான போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடன் நஸ்ரியா நசீம், ‘பிரேமலு’ புகழ் நஸ்லென், ஆனந்த்ராஜ், ஜான் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘ஆவேஷம்’ படத்திற்கு இசையமைத்த சுஷின் ஷியாம் இசையில் இப்படமும் உருவாகிறது.

suriya1

இன்று காலை சென்னையில் நடைபெற்ற பூஜை நிகழ்ச்சியில் இயக்குநர் ஜீத்து மாதவன், நஸ்ரியா, நஸ்லென், நடிகை ஜோதிகா, நடிகர் கார்த்தி, தயாரிப்பாளர்கள் ராஜசேகர் பாண்டியன், எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்டோர் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். பூஜை முடிந்த உடனேயே முதற்கட்ட படப்பிடிப்பும் ஆரம்பமானது.

suriya2

ழகரம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படம் ஆக்சன், உணர்வுகள் கலந்த பவர்ஃபுல் டிராமாவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, ஆர்ஜே பாலாஜி இயக்கிய சூர்யாவின் ‘கருப்பு’ ஜனவரி 2026-ல் ரிலீசாகவுள்ள நிலையில், ‘சூர்யா 47’ அடுத்தடுத்து அவரது மாஸ் அவதாரத்தை திரையில் காட்டவுள்ளது. ரசிகர்கள் ஏற்கனவே #Suriya47Trending என்ற ஹேஷ்டேக்கை வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்!

suriya3