கே.ஜி.எஃப் சாம்ராஜ்யத்தை உருவாக்கி பான்-இந்தியா ஸ்டாராக உயர்ந்த ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் அடுத்த மாபெரும் படம் ‘டாக்ஸிக்’ (Toxic). இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை இன்று ஹீரோ யாஷ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பிரம்மாண்ட போஸ்டருடன் பதிவிட்ட யாஷ், “TOXIC – A Fairy Tale for Grown-ups 19th March 2026 இன்னும் சரியாக 100 நாட்களில் உங்களைச் சந்திக்கிறது!” என்று கூறியுள்ளார்.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில், கே.வி.என். புரொடக்ஷன்ஸ் & மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த், ஷைனி அஹூஜா உள்ளிட்ட பிரம்மாண்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.
கே.ஜி.எஃப்-க்கு மேஜிக் செய்த இசையமைப்பாளர் ரவி பசூர்தான் ‘டாக்ஸிக்’-குக்கும் இசையமைக்கிறார்.
‘A Film by Geetu Mohandas’ என்று சிறப்பாகக் குறிப்பிடப்படும் இப்படம் கே.ஜி.எஃப்-ஐ விட பல மடங்கு பெரிய ஸ்கேலில் உருவாகியிருப்பதாகவும், கோவா டிரக் வாரை மையப்படுத்திய கதை என்றும் படக்குழு ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்தியா படங்களில் ஒன்றான ‘டாக்ஸிக்’ இப்போது 2026 மார்ச் 19-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெடிக்கத் தயாராக உள்ளது!
ரசிகர்கள் ஏற்கெனவே #100DaysForToxic, #ToxicOnMarch19 என ட்ரெண்ட் செய்து கொண்டாட்டத்தைத் தொடங்கிவிட்டனர்.
ராக்கிங் ஸ்டார் யாஷின் மிரட்டல் அவதாரம் மீண்டும் வருகிறது… Get Ready!
திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு கூட்டணி, தனது முதல் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வேகமாக உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் முக்கிய…
நடிகர் விஜயகாந்தின் இளைய மகனும், நடிகருமான சண்முக பாண்டியன் நடிப்பில், பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொம்புசீவி' திரைப்படம் இன்று (டிசம்பர்…
உலகப் புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞரும், இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா பெற்ற முதல் இசைக் கலைஞருமான எம்.எஸ்.சுப்புலட்சுமியின்…
தளபதி விஜய் நடிப்பில், கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’…
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது அடுத்தடுத்து பிரம்மாண்டமான திட்டங்களில் பிஸியாக உள்ளார்.