‘அகண்டா 2’ ரிலீஸ் ஒத்திவைப்பு!
December 5, 2025 Published by Natarajan Karuppiah

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான பாலகிருஷ்ணா நடிப்பில், ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘அகண்டா 2’ திரைப்படம் இன்று வெளியாகும் என திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக படக்குழுவினர் இன்று வருத்தத்துடன் அறிவித்துள்ளனர்.
படம் வெளியாகும் என்று ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு இது ஒரு ஏமாற்றமான செய்தியாக அமைந்துள்ளது.
எங்கள் கனத்த இதயத்துடன், தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக, ‘அகண்டா 2’ திட்டமிட்டபடி வெளியிடப்படாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இது எங்களுக்கு ஒரு வேதனையான தருணம், மேலும் இந்த படத்திற்காக காத்திருக்கும் ஒவ்வொரு ரசிகருக்கும் மற்றும் சினிமா பிரியருக்கும் இது ஏற்படுத்தும் ஏமாற்றத்தை நாங்கள் உண்மையாகப் புரிந்துகொள்கிறோம்.
இந்த சிக்கலை கூடிய விரைவில் தீர்க்க நாங்கள் அயராது உழைத்து வருகிறோம். இந்த சிரமத்திற்காக எங்கள் மனமார்ந்த மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறோம்.
உங்கள் ஆதரவு எங்களுக்கு மிகவும் முக்கியமானது. மிக விரைவில் ஒரு நல்ல செய்தியைப் பகிர்ந்து கொள்வதாக நாங்கள் உறுதியளிக்கிறோம் என்று படக்குழுவினர் அறிவித்தனர்.

























