அஞ்சான் ரீ-எடிட் வெர்ஷன் வெளியீடு: நவம்பர் 28 முதல் திரையரங்குகளில் அதிரடி ரீ-ரிலீஸ்!
November 21, 2025 Published by anbuselvid8bbe9c60f

2014-ல் லிங்குசாமி இயக்கி, நடிகர் சூர்யா இரட்டை வேடத்தில் மிரட்டிய ஆக்ஷன் திரில்லர் ‘அஞ்சான்’ மீண்டும் திரைக்கு வருகிறது! புத்தம் புதிய ரீ-எடிட் வெர்ஷனில் வருகிற நவம்பர் 28-ம் தேதி முதல் தமிழக திரையரங்குகளில் இந்தப் படம் மீண்டும் வெளியாகவுள்ளது.
சமந்தா, வித்யுத் ஜம்வால், சூரி, மனோஜ் பாஜ்பாய் என பிரம்மாண்ட நட்சத்திர பட்டாளத்துடன் உருவான இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜாவின் ஹிட் பாடல்களும், இன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகும் மாஸ் டயலாக்குகளும் பெரும் பலம்.
சமீபத்தில் நடைபெற்ற ரீ-எடிட் வெர்ஷனின் ப்ரீவியூ ஷோவில் சூர்யாவின் தந்தையும் நடிகருமான சிவகுமார் மற்றும் பிரபல இயக்குநர் சரண் கலந்துகொண்டு படம் பார்த்தனர். படத்தைப் பார்த்து வியந்த இருவரும் இயக்குநர் லிங்குசாமியை மனமுருக பாராட்டினர். “ரீ-எடிட் செய்த பிறகு படம் இன்னும் அதிரடியாக மாறியிருக்கிறது” என்று தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை அறிந்த சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் #AnjaanReRelease, #AnjaanOnNov28 போன்ற ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பெரிய திரையில் ‘அஞ்சான்’ படத்தை ரசிகர்கள் கொண்டாடத் தயாராகி விட்டனர். நவம்பர் 28… அஞ்சாதே, திரையரங்குக்கு வா!























