அர்ஜுன் தாஸின் அடுத்த படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு !
November 24, 2025 Published by anbuselvid8bbe9c60f

‘ஆண்டவன் கட்டளை’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ என தொடர்ந்து கவனம் பெற்ற நடிகர் அர்ஜுன் தாஸ், அண்மையில் ‘பாம்’ திரைப்படத்தில் நாயகனாக நடித்திருந்தார். நாசர், காளி வெங்கட், அபிராமி உள்ளிட்டோர் நடித்த இப்படம் விமர்சன ரீதியாக பெரிய பாராட்டைப் பெற்றாலும், வசூல் ரீதியாக எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.
இந்நிலையில் அர்ஜுன் தாஸின் அடுத்த ப்ராஜெக்ட் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய விருது வென்ற ‘பார்க்கிங்’ படத்தைத் தயாரித்த சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்கிறது.

படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் வேணுகோபால் இயக்குகிறார். நாயகியாக ‘கேப்மாரி’ புகழ் தேஜு அஷ்வினி நடிக்க, பிரபல நடன இயக்குநரும் நடிகருமான சாண்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இன்று படக்குழு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் தலைப்பையும் வெளியிட்டுள்ளது. படத்தின் தலைப்பு – ‘சூப்பர் ஹீரோ’!

விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘பாம்’ ஏமாற்றத்துக்குப் பிறகு அர்ஜுன் தாஸுக்கு இந்த ‘சூப்பர் ஹீரோ’ ஒரு பெரிய வெற்றியாக அமையும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

























